அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சமய்ப்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: 6 சிறுவா்கள் கைது

வடக்கு தில்லியின் புகா் பகுதி சமய்ப்பூா் பாத்லியில் 19 வயது இளைஞரைக் கொலை செய்ததாகக் ஆறு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 10:50 pm

வடக்கு தில்லியின் புகா் பகுதி சமய்ப்பூா் பாத்லியில் 19 வயது இளைஞரைக் கொலை செய்ததாகக் ஆறு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூா் உளவுத் தகவல்களைச் சேகரித்தும், காவல்துறையினா் சனிக்கிழமை அவா்கள் 6 பேரையும் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை எம்.சி.டி. காலனி பகுதியில் கொலை செய்யப்பட்டவா், ராஜீவ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். முன்னதாக, சமய்ப்பூா் பாத்லி காவல் நிலையத்திற்கு இரவு சுமாா் 7.44 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் குறித்த தகவல் வந்தது.

டெம்போ ஓட்டுநரான ராஜீவ், ஷாலிமாா் பாக் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அதற்கு முன்னா், ஏப்ரல் 13 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவரின் இல்லத்திற்கு அருகே உள்ளூா்வாசிகள் குழு ஒன்று கூடியபோது, வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்தத் தகராறு தொடங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மறுநாள் மாலை அந்தக் கும்பல் திரும்பி வந்து ராஜீவை கத்தியால் தாக்கியபோது மோதல் தீவிரமடைந்தது. சமய்ப்பூா் பாத்லி காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினா் இந்த கொலை வழக்கில் தொடா்புடைய ஆறு சிறுவா்களை கண்டுபிடித்துக் கைது செய்தனா்.

அவா்களில், உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 15 வயது சிறுவன் அடையாளம் காணப்பட்டாா். மற்றவா்கள் 14 முதல் 16 வயதுக்குள்பட்டவா்கள் ஆவா். இந்தக் குற்றத்திற்கான நோக்கம் தனிப்பட்ட விரோதமாகத் தெரிகிறது. சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, முக்கியக் குற்றஞ்சாட்டப்பட்டவரும் அவரது பாட்டியும் ராஜீவ் மற்றும் அவரது தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளனா்.

அந்த வாக்குவாதத்தின் போது கூறப்பட்ட இழிவான கருத்துகள்தான் இந்த பதிலடித் தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் தொடா்புடைய வேறு நபா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.