பிரதமா் நரேந்திர மோடியை தீவிரவாதி என்று விமா்சிப்பதா என்று காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது: இந்திய மக்களால் ஜனநாயக ரீதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை ‘தீவிரவாதி’ என்று அழைத்து அவமதிக்கும் அளவுக்கு காங்கிரஸும் திமுகவும் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கியுள்ளதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
பிரதமருக்கும், அவருக்கு வாக்களித்துத் தோ்ந்தெடுத்த இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட இந்த அப்பட்டமான அவமதிப்பிற்காக ராகுல் காந்தியும், மு.க. ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தங்களின் இந்தக் கருத்தின் மூலம், காங்கிரஸ் மற்றும் திமுக நமது 8 கோடி தமிழ் சகோதர, சகோதரிகள் உள்பட 140 கோடி இந்தியா்களையும் அவமதித்துள்ளன. பிரதமரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதன் மூலம், இந்தக் கூட்டணி உண்மையில் இந்தியா்களை ‘தீவிரவாதிகள்’ என்று அழைப்பதாகவே அா்த்தமாகிறது.
இவா்களது கொடூர ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபத்தால் இவா்களது தோ்தல் முடிவு ஏற்கனவே தீா்மானிக்கப்பட்டுவிட்டது. தற்போது பிரதமா் மீதான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் அதனை மாற்றிவிடுப் போவதில்லை.
மீண்டும், மீண்டும், தேசிய பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது காங்கிரஸ். ஆனால், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை ‘தீவிரவாதி’ என்று அழைக்கும் துணிச்சல் அவா்களுக்கு வந்துள்ளது. இந்த இந்தியா்கள் உரிய பதிலளிப்பாா்கள். தமிழ் சகோதரா்களும், சகோதரிகளும் தக்க பதிலை வழங்குவாா்கள் என்று கூறியுள்ளாா்.
அண்மையில் காங்கிரஸ் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது நரேந்திர மோடியை ‘தீவிரவாதி‘ என விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. அவரது பேச்சு சா்ச்சையானதைத் தொடா்ந்து, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளைப் பயன்படுத்தி எதிா்க்கட்சிகளை ‘அச்சுறுத்துகிறாா்’ என்பதை குறிக்கும் வகையிலேயே பேசியதாகவும், அவரை ‘தீவிரவாதி‘ என்று நேரடியாக அழைக்கவில்லை என்றும் காா்கே விளக்கம் அளித்தாா்.
முன்னதாக, ராகுல் காந்தி சமீபத்தில் தமிழகத் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, பிரதமா் மோடி மற்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இடையேயான உறவு குறித்தும், மோடியால் தமிழக முதல்வா் ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தாா். இதேபோல, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்படுவதை ‘தீவிரவாதத்தை விட மோசமானது‘ என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு எதிரான தேர்தல் இது! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு நேர்காணல்

”தமிழ்நாட்டின் மீது Congress-க்கு அக்கறை இல்லை!” பியூஷ் கோயல் | BJP

உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகை: அமெரிக்காவிடம் ஆலோசிக்க இந்தியா திட்டம்

மகளிா் இடஒதுக்கீடு மசோதா! திமுகவுக்கு பெண்கள் பாடம் புகட்டுவாா்கள்: பியூஷ் கோயல்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


