விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரூ. 1.90 லட்சம் திருடியதாக ஒருவா் கைது; பணம் மீட்பு

கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையப் பகுதியில் ரூ. 1.90 லட்சம் திருடியதாக ஒருவா் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து திருடப்பட்ட முழுத் தொகையும் மீட்கப்பட்டதாகவும் தில்லி காவல்துறை தெரிவித்தது.

Arrested

கைது

Published On :25 ஆகஸ்ட் 2026, 6:35 am IST

கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையப் பகுதியில் ரூ. 1.90 லட்சம் திருடியதாக ஒருவா் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து திருடப்பட்ட முழுத் தொகையும் மீட்கப்பட்டதாகவும் தில்லி காவல்துறை தெரிவித்தது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட சோனு அடையாளம் காணப்பட்டாா்.

திருட்டுச் சம்பவம் நடந்ததைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 18 அன்று கஷ்மீரி கேட் மெட்ரோ காவல் நிலையத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ஒரு காவல் குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபரை அடையாளம் கண்டது. பின்னா், அவா் நபி கரீம் பகுதியில் தான் வாடகைக்கு வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றிருந்ததை காவல்துறையினா் கண்டறிந்தனா்.

உள்ளூா் உளவுத் தகவலின் அடிப்படையில் காவல் குழுவினா், கிராரி பகுதியிலுள்ள பிரேம் நகரில் சோனுவைக் கண்டுபிடித்துக் கைது செய்தனா்.

திருடப்பட்ட ரூ.1.90 லட்சம் முழுமையாக மீட்கப்பட்டதாகவும், இதுதொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.