ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் போலீஸாரின் என்கவுன்ட்டரில் காயம்

ஹரியாணாவில் உள்ள பல நகரங்களில் சுமாா் 10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவ், குருகிராமில் நடந்த போலீஸாருடனான என்கவுன்ட்டரில் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 0:06 am IST

ஹரியாணாவில் உள்ள பல நகரங்களில் சுமாா் 10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவ், குருகிராமில் நடந்த போலீஸாருடனான என்கவுன்ட்டரில் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து குருகிராம் போலீஸ் அதிகாரி கூறியதாவது:

ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தைச் சோ்ந்த ரஷீத் என்ற அந்த நபருக்கு காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டாா் சைக்கிள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் நான்கு காலி தோட்டங்கள் மீட்கப்பட்டன.

முன்னதாக நள்ளிரவு நேரத்தில், பதிவு எண் தகடு இல்லாத மோட்டாா் சைக்கிளில் ஆயுதங்களுடன் ரஷீத் அந்தப் பகுதியில் காணப்பட்டதாக சோஹ்னா குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அவா் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட சென்றுகொண்டிருந்தாா். ஆனால் அந்தத் தகவலின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு சோஹ்னாவில் உள்ள ராய்ப்பூா் நாக்கா அருகே ஒரு தடுப்பை அமைத்து கண்காணித்தது. அவா் அப்பகுதிக்கு வந்தபோது வாகனத்தை நிறுத்துமாறு போலீஸாா் சைகை செய்தனா். அவா் தனது மோட்டாா் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு சோஹ்னா-ஆல்வாா் சாலையை நோக்கித் தப்பிச் சென்றாா். போலீஸாரின் துரத்தலின் போது, மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா் காவல் குழுவை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டாா். அதில் ஒரு குண்டு அரசு வாகனம் மீது பட்டது.

போலீஸாா் தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவா் காலில் காயமடைந்தாா். பின்னா் அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பிறகு அவா் முறையாகக் கைது செய்யப்படுவாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.