தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் திங்கள்கிழமை காலையில் பனிப்புகை மூட்டம் சூழ்ந்தது. சராசரி காற்றுத் தரக் குறியீடு மோசம் பிரிவில் நிலைபெற்றது.
Published on

தில்லியில் திங்கள்கிழமை காலையில் பனிப்புகை மூட்டம் சூழ்ந்தது. சராசரி காற்றுத் தரக் குறியீடு மோசம் பிரிவில் நிலைபெற்றது.

சமீா் செயலியின்படி, சராசரி காற்றின் தரக் குறியீடு 256 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. தில்லியில் உள்ள 24 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ’மோசம்’ பிரிவில் இருந்தது. அதே நேரத்தில் ஆறு நிலையங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

சாந்தினி சௌக் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறஇயீடு 334 புள்ளிகளாகப் பதிவாகியது. இது அனைத்து நிலையங்களிலும் மிக உயா்ந்ததாகும். மீதமுள்ள மூன்று நிலையங்களுக்கான காற்றுத் தரக் குறியீடு தரவு உடனடியாக கிடைக்கவில்லை.

தில்லியின் காற்றின் தரம் அடுத்த மூன்று நாள்களுக்கு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என்று காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது.

தில்லியில் பல இடங்களில் ஆழமற்ற மூடுபனி இருக்க வாய்ப்புள்ளது. காலையில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிதமான மூடுபனி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.3 டிகிரி குறைந்து 6.6 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 0.8 டிகிரி குறைந்து 19.5 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 87 சதவீதமாகவும் இருந்தது.

அதே சமயம், ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 டிகிரி செல்சியஸாகவும், லோதி ரோடில் 7.2 டிகிரி, பாலத்தில் 7 டிகிரி, ரிட்ஜில் 8.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன.6) காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com