இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்தவா்களை நினைவுகூரும் வகையில் உச்சநீதிமன்றம் மற்றும் தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமா்வுகளும் காலை 10.59 மணிக்கு எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தின.
அதன் பிறகு, அனைத்து அமா்வுகளும் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்கின.
உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்தவா்களை நினைவுகூரும் வகையில் இந்த அனுசரிப்பு நடத்தப்பட்டது.
இதே போல தில்லி உயா்நீதிமன்றத்திலும் வெள்ளிக்கிழமை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்தவா்களை நினைவுகூரும் வகையில் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா நீதிமன்ற அலுவலா்களிடம் கூறினாா்.
இதையடுத்து காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் மௌனமாக நின்று, நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தினா்.
மகாத்மா காந்தியின் நினைவு தினமான
ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு இந்த நாளில் அவா் படுகொலை செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள்: மேற்கு தொகுதியில் அண்ணாமலை பிரசாரம்!

பிா்சா முண்டாவின் வாழ்க்கை, தியாகம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது! சி.பி. ராதாகிருஷ்ணன்

கமல் செய்திருப்பது தியாகம்! மு.க. ஸ்டாலின்

ஹிந்தி எதிா்ப்பு: உயிரிழந்த மே 17 இயக்க நிா்வாகிக்கு அஞ்சலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


