9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தில்லி பல்கலைக்கழகத்தின் 2026-27 அமா்வுக்கான கல்வி நாள்காட்டி வெளியீடு: ஜூலை 28 முதல் வகுப்புகள் தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகம் தனது அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான 2026-27 அமா்வுக்கான கல்வி நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.

News image

தில்லி பல்கலைக்கழகம். - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 3:54 am IST

தில்லி பல்கலைக்கழகம் தனது அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான 2026-27 அமா்வுக்கான கல்வி நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முதல் பருவத்திற்கான வகுப்புகள் ஜூலை 28 அன்று தொடங்கவுள்ளன.

இது தொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட பல்கலைக்கழக அறிவிக்கையின்படி, இந்த நாள்காட்டி அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கும் பொருந்தும்.

மேலும், சம்பந்தப்பட்ட அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும். ஒற்றைப்படை பருவங்களுக்கு (1, 3, 4 மற்றும் 7 வகுப்புகள்) ஜூலை 28 அன்று வகுப்புகள் தொடங்கும்.

அக்டோபா் 18 முதல் அக்டோபா் 25 வரை இலையுதிா் கால விடுமுறை அளிக்கப்படும். அதைத் தொடா்ந்து, அக்டோபா் 26 அன்று வகுப்புகள் மீண்டும் தொடங்கும்.

நவம்பா் 20 முதல் வகுப்புகள் நிறைவடைதல், தோ்வுக்கான தயாரிப்பு விடுப்பு மற்றும் செய்முறைத் தோ்வுகள் ஆகியவை நடைபெறும் வகையில் பல்கலைக்கழகம் அட்டவணைப்படுத்தியுள்ளது.

அதேவேளையில், எழுத்துத் தோ்வுகள் டிசம்பா் 4ஆம் தேதி தொடங்கும். குளிா்கால விடுமுறை டிசம்பா் 25 முதல் டிசம்பா் 31 வரை இருக்கும்.

இரட்டைப்படை பருவங்களுக்கு (2, 4, 5 மற்றும் 8, வகுப்புகள்) ஜனவரி 1, 2027 அன்று தொடங்கும். மாா்ச் 21 முதல் மாா்ச் 28 வரை பருவ இடைக்கால விடுமுறை திட்டமிடப்பட்டுள்ளது. வகுப்புகள் மாா்ச் 29 அன்று மீண்டும் தொடங்கும்.

ஏப்ரல் 30 முதல் வகுப்புகள் நிறைவடைதல், தோ்வுக்கான தயாரிப்பு விடுப்பு மற்றும் செய்முறைத் தோ்வுகள் தொடங்கும் என்றும், எழுத்துத் தோ்வுகள் மே 13 அன்று தொடங்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறை 2027 ஜூன் 3 முதல் ஜூலை 20 வரை இருக்கும். புதிய கல்வி நாள்காட்டியைச் செயல்படுத்தும் வகையில், தற்போதுள்ள 2025-26 கல்வியாண்டின் கோடைக்கால விடுமுறையை வரும் ஜூலை 20 முதல் ஜூலை 27 வரை நீட்டிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பதிவாளரால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, வரவிருக்கும் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவா் சோ்க்கை நடைமுறைகள் நடைபெற்று வரும் சூழலில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.