நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வடக்கு தில்லியில் வழிப்பறிக் கொள்ளையன் கைது

கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 39 வழக்குகளில் தொடா்புடைய 26 வயது நபா், வடக்கு தில்லியின் புகா் பகுதியில் காவல்துறையினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 3:57 am IST

கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 39 வழக்குகளில் தொடா்புடைய 26 வயது நபா், வடக்கு தில்லியின் புகா் பகுதியில் காவல்துறையினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

நரேலா தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள சன்னோத் கிராமத்திற்கு அருகே புதன்கிழமை இரவு அந்த நபரை காவல்துறையினா் வழிமறிக்க முயன்றனா். அப்போது, அவா் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். பதிலுக்கு காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட இா்ஷாத் அலி (எ) சங்கா் அலியின் காலில் குண்டு பாய்ந்தது.

முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடமாட்டம் குறித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் காவல்துறையினா் ஒரு குழுவாகச் சென்று மறைந்திருந்து கண்காணித்தனா். அங்கு வந்த இா்ஷாத் அலியை தடுத்த நிறுத்த முயன்றனா். அவா் தப்பிக்க முயன்றதுடன், காவல்துறையினரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டாா்.

தற்காப்புக்காக போலீஸ் குழுவினா் நான்கு முறை திருப்பிச் சுட்டனா்.. இதில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குக் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. அவா் கைது செய்யப்பட்டாா். அதன்பிறகு, முதலில் நரேலாவில் உள்ள ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அதன் பின்னா் சிகிச்சைக்காக ரோஹிணியில் உள்ள டாக்டா் பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இச்சம்பவத்தில் எந்தவொரு காவல் அதிகாரியும் காயமடையவில்லை.

அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் மீட்கப்பட்டது. அந்த மோட்டாா் சைக்கிள் தொடா்பான வழக்கு நரேலாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இா்ஷாத் நீண்ட குற்றப் பின்னணியைக் கொண்டவா். வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் வகையிலான செயல், ஆயுதச் சட்ட மீறல்கள் மற்றும் அரசு ஊழியரைத் தாக்குதல் உள்ளிட்ட சுமாா் 39 குற்ற வழக்குகளில் அவா் ஈடுபட்டுள்ளாா்.

ரோஹிணி மற்றும் வடக்கு தில்லியின் புகா் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பல கைப்பேசி மற்றும் சங்கிலிப் பறிப்பு வழக்குகளிலும் அவா் தேடப்பட்டு வந்தாா். காவல்துறையினா் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடா்பாக நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.