தில்லி மெட்ரோ தனது சேவைகள் மற்றும் வசதிகள் குறித்த பயணிகளின் கருத்துக்களை அறிய, புதன்கிழமை (ஜூலை 15-ஆம் தேதி ) முதல் ஆகஸ்ட் 14 வரை தனது 12ஆவது இணையவழி வாடிக்கையாளா் திருப்தி ஆய்வை நடத்தவுள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பயணிகளின் அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கும், மேம்பாட்டிற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் நடத்தப்படும் இந்த ஆய்வில், விரிவான கேள்வித்தாள் மூலம் ஏழு முக்கிய அம்சங்கள் குறித்து கருத்துகள் சேகரிக்கப்படும்.
இதில் சேவை மற்றும் வசதிகளின் இருப்பு மற்றும் அணுகல்தன்மை, வாடிக்கையாளா்களுக்கான வசதிகள், தகவல் சேவைகள், சேவையின் தரம், வாடிக்கையாளா் சேவை, மெட்ரோ வளாகத்திற்கு வெளியேயுள்ள வசதிகள், பாதுகாப்பு மற்றும் வசதியான பயணம் ஆகியவை இடம்பெறும்.
இந்த ஆய்வில் பங்கேற்க விரும்பும் பயணிகள், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரபூா்வ இணையதளத்திற்குச் சென்று, அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள இணைப்புகள் வழியாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம். ஆய்வுக் படிவம் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும்.
ஆய்வுக்கான இணைப்புகள் டிஎம்ஆா்சி இணையதளத்தில் ஒரு மாத காலத்திற்கு, அதாவது ஆகஸ்ட் 14 வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த நடவடிக்கையின் மூலம் பெறப்படும் கருத்துகள், பயணிகளின் திருப்தி அளவை மதிப்பிடவும், மெட்ரோ வசதிகள் மற்றும் சேவைகளில் எங்கு மேம்பாடுகள் தேவை என்பதை அடையாளம் காணவும் உதவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2026-இல் 99.95% சரியான நேர மேலாண்மையை கடைப்பிடித்த தில்லி மெட்ரோ ரயில் சேவை

‘மின் மானியத்தில் முறைகேடு, நிலங்கள் வீணடிப்பு’ பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தகவல்

பிரதமா் மீது அவதூறு பதிவுகள்: தில்லி காவல் துறை வழக்குப் பதிவு

இந்தா்லோக் - இந்திரபிரஸ்தா மெட்ரோ வழித்தடப் பணிகள்: தில்லி முதல்வா் தொடங்கிவைத்தாா்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



