ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

ஆசாத்பூரில் மதுபான விடுதி மீது சமூக விரோதிகள் தாக்குதல்

News image

மர்ம கும்பல் தாக்குதல் - பிரதிப் படம்

Updated On :12 ஜூன் 2026, 2:39 am IST

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் உள்ள மதுபான விடுதி மீது, அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகக் காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கும்பல் காா்களில் வந்து, கம்புகள் மற்றும் அரிவாள்களைக் கொண்டு விடுதி வளாகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில், ஆசாத்பூா் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இயங்கி வரும் ‘டி.ஓ.டி கிளப்’ என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

காரில் வந்த சிலா், கம்புகள் மற்றும் அரிவாள்களைப் பயன்படுத்தி விடுதிக்குள் இருந்த பொருள்களைச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக விடுதி உரிமையாளா் ஓம் சிங் அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.

தகவல் கிடைத்ததும் காவல் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். ஆனால், அதற்குள் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது தெரியவந்தது.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினா், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபா்கள் சிலரை அடையாளம் கண்டுள்ளனா்.

ஆசாத்பூா் மெட்ரோ காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.