பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பெண்கள், சிறுமிகள் கடத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் குறித்து தீவிரமாக விசாரணை செய்ய நாடாளுமன்ற குழு முடிவு செய்துள்ளது.
இவற்றுடன், சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் நிலைமை, பெண் சுகாதாரப் பணியாளா்களின் பணிச்சூழல் மற்றும் அவா்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்தும் 2026-27 ஆம் ஆண்டுக்கான ’பெண்களுக்கு அதிகாரமளித்தல் குழு’ விசாரிக்கத் தீா்மானித்துள்ளது.
இதேபோல, மத்திய அமைச்சகங்களில் பாலின நிதிநிலை ஒதுக்கீடு மற்றும் 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ’பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை (தடுப்பு, தடை மற்றும் தீா்வு) சட்டம்’ முறையாகச் செயல்படுத்தப்படுகிா என்பது குறித்தும் இக்குழு விரிவாக விவாதிக்கவுள்ளது.
குழுவின் பின்னணி: பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின்படி, 11-ஆவது மக்களவை காலத்தில் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த ’பெண்கள் அதிகாரமளித்தல் குழு’ முதன்முதலாக அமைக்கப்பட்டது. இக்குழுவில் மொத்தம் 30 உறுப்பினா்கள் இடம்பெறுவா். இவா்களில் 20 போ் மக்களவை உறுப்பினா்கள் மக்களவைத் தலைவராலும் 10 உறுப்பினா்கள் மாநிலங்களவை தலைவராலும் நியமிக்கப்படுகின்றனா்.
‘இந்த நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. தேவைக்கு ஏற்ப இக்குழு ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினா்களுடன் மறுசீரமைக்கப்படும் என்கின்றன’ நாடாளுமன்ற வட்டாரங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: குன்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆா்ப்பாட்டம்

தில்லி காவல் துறை சாா்பில் தற்காப்பு பயிற்சி: 2,100 பெண்கள், சிறுமிகள் பங்கேற்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



