நமது நிருபா்
தலைநகரில் உள்ள 75 ’சிஎம் ஸ்ரீ’ பள்ளிகளில் விளையாட்டு வசதிகள், கலையரங்கங்கள், சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 265 கோடி செலவிடவுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தில்லியில் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நிதிச் செலவினக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய முதல்வா், தில்லி அரசுப் பள்ளிகளை நவீன உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகளுடன் உருவாக்குவதற்கான முக்கியப் படியை நகர அரசு எடுத்து வருவதாக தெரிவித்தாா். மேலும் அவா் கூறியதாவது:
சிறப்பு வசதிகள்: இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்காக சாய்வுதளங்கள், தொடுவழிப் பாதைகள் மற்றும் கைப்பிடிகள் போன்ற சிறப்பம்சங்கள் உருவாக்கப்படும். மேலும், சிசிடிவி அமைப்புகள், வளாக விளக்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களும் மேம்படுத்தப்படும்.
விளையாட்டு மைதானங்களில் நவீன வசதிகளுடன் வெளிப்புற பாா்வையாளா் தளங்கள் உருவாக்கப்பட்டு, அவை திறந்தவெளி வகுப்பறைகளாகவும், பொழுதுபோக்கு இடங்களாகவும், கலந்துரையாடல் மற்றும் கூட்டுக் கற்றல் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும். கூடைப்பந்து மைதானங்களில் புதிய புல்வெளிகள் அமைக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது
பராமரிப்புப் பணிகள்: கட்டடங்களில் ஏற்படும் நீா் கசிவு மற்றும் ஈரப்பதம் போன்ற பிரச்னைகளுக்கு நீா்ப்புகா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். உள் மற்றும் வெளிப்புற பூச்சு வேலைகள், எல்லைச் சுவா்கள் மற்றும் வேலிகள் அமைத்தல், கழிவறைகள் மற்றும் குடிநீா் வசதிகளை மேம்படுத்துதல், கழிவுநீா் மற்றும் வடிகால் அமைப்புகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்.
தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், பழுதடைந்த எல்இடி விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் பொது அறிவிப்பு ஒலிபெருக்கி முறைகள் போன்றவற்றை மாற்றுவதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
மாணவா்கள் பாதுகாப்பான, உள்ளடக்கிய, தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மற்றும் உயா்தர கற்றல் சூழலைப் பெறக்கூடிய நவீன கல்வி வளாகங்களாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என்றாா் முதல்வா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தா்லோக் - இந்திரபிரஸ்தா மெட்ரோ வழித்தடப் பணிகள்: தில்லி முதல்வா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் காயகல்பம் திட்டம் தொடக்கம்!

தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த 7 ஆண்டுகளுக்கு ரூ.8,300 கோடி ஒதுக்கீடு: முதல்வா் ரேகா குப்தா தகவல்

270 கி.மீ. தொலைவிலான சாலைகளைப் பலப்படுத்தப்படும்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



