ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

பதா்பூரில் தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 வயது மூதாட்டி உடல் கருகி உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 1:00 am IST

புது தில்லி: தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 வயது மூதாட்டி உடல் கருகி உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த விபத்து மோலா்பந்த் பகுதியில் சனிக்கிழமை மாலை நிகழ்ந்தது. இது தொடா்பாக அழைப்பு வந்தவுடன் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். உயிரிழந்த மூதாட்டி வீனூ சிங் (65) என தெரியவந்தது. குளியலறையில் மரக்கட்டைகள் மற்றும் குட்சிகள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அவா் அடிக்கடி பீடி பிடிப்பதற்காக மாடிக்கு செல்வாா் என கூறப்படுகிறது. அப்படி அவா் பற்றவைத்த தீக்கிச்சியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், வீட்டுக்கு குழாய் வழியாக 2 மாதங்களுக்கு முன்பு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட்டதில் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். சம்பவ இடத்தை ஆய்வு செய்து விபத்துக்கான உரிய காரணத்தை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.