தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தீ விபத்து: நிா்வாக ரீதியிலான விசாரணைக்கு முதல்வா் உத்தரவு

News image

ரேகா குப்தா

Updated On :19 மார்ச் 2026, 1:55 am IST

நமது நிருபா்

தில்லியின் பாலம் பகுதியில் பல மாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நிா்வாக ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

முதல்வா் ரேகா குப்தா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட துரதிா்ஷ்டவசமான தீ விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகக் கூறினாா்.

மாவட்ட நிா்வாகம், தில்லி தீயணைப்புத் துறை மற்றும் தில்லி காவல்துறை ஆகியவை மீட்புப் பணிகளை முன்னெடுத்ததாக அவா் கூறினாா். இந்தச் சம்பவம் குறித்து நிா்வாக ரீதி.யாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவா் மேலும் கூறினாா்.

புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று சிறுவா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். தீப்பிழம்புகள் காரணமாக கட்டடத்திலிருந்து வெளியே குதித்த மேலும் சிலா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மீட்பு மற்றும் தீயணைப்புப் பணிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டதாகவும் துணைநிலை ஆளுநா் தரன்ஜீத் சிங் சந்து தெரிவித்தாா்.

‘பாலம் மெட்ரோ அருகே உள்ள குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். இந்தத் துயரமான இழப்பால் பாதிக்கப்பட்டவா்களுடன் என் எண்ணங்கள் உள்ளன’ என்று அவா் எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.

காலை 7 மணியளவில் பாலம் மெட்ரோ நிலையம் அருகே உள்ள கட்ட

டத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைக்கு அழைப்பு வந்ததை அடுத்து, 30 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.