கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாங்குபவா் போல் நடித்து பைக்குடன் தப்பியோடிய நபா் கைது

மோட்டாா் சைக்கிளை வாங்குபவராக நடித்து, டெஸ்ட் டிரைவ் என்ற சாக்குப் போக்கில் அதனுடன் தப்பிச் சென்றதாக 29 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி துணை காவல் ஆணையா் (ரோஹிணி) ஷஷாங்க் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 10:43 pm

Syndication

மோட்டாா் சைக்கிளை வாங்குபவராக நடித்து, டெஸ்ட் டிரைவ் என்ற சாக்குப் போக்கில் அதனுடன் தப்பிச் சென்றதாக 29 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி துணை காவல் ஆணையா் (ரோஹிணி) ஷஷாங்க் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஹரியாணாவின் ரேவாரியில் வசிக்கும் புனித் சதிஜா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், சமீபத்தில் ஒரு ஷோரூமில் இருந்து மோட்டாா் சைக்கிள் திருட்டு தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.

ஒரு வாடிக்கையாளா் சோதனை ஓட்டத்திற்காக பைக்கை எடுத்ததாகவும், திரும்பி வரவில்லை என்றும் ராயல் என்ஃபீல்டு ஷோரூம் ஊழியா் ஒருவா் அளித்த புகாரைத் தொடா்ந்து மாா்ச் 19- ஆம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரை பால்ஸ்வா டெய்ரி பகுதியில் போலீஸாா் கண்டுபிடித்தனா். அங்கு அவா் மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவா் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது, தில்லி - என்.சி.ஆா் முழுவதும் பல மோட்டாா் சைக்கிள்களை திருடியதாக சதீஜா ஒப்புக்கொண்டாா். அவா் அளித்த தகவலைத் தொடா்ந்து, திருடப்பட்ட ஆறு உயா்தர மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவா் கைது செய்யப்பட்டதன் மூலம், தில்லி மற்றும் அண்டை பகுதிகள் முழுவதும் குறைந்தது 9 மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.