தில்லி காவல்துறையினா் கடந்த ஏப்ரல் மாதத்தில் காணாமல் போன 194 பேரைக் கண்டுபிடித்து அவா்களது குடும்பத்தினருடன் மீண்டும் சோ்த்துவைத்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: இந்த 194 பேரில் நிகழாண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை மீட்கப்பட்ட, காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட 45 குழந்தைகளும், 149 பெரியவா்களும் அடங்குவா்.
‘ஆபரேஷன் மிலாப்’ திட்டத்தின் கீழ், புலனாய்வாளா்கள் உள்ளூா் உளவுத் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.
இதில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தல் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆட்டோ மற்றும் இரிக்ஷா நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் காணாமல் போன நபா்களின் புகைப்படங்களைப் பரப்புதல் ஆகியவை அடங்கும்.
நடமாட்டங்களைக் கண்காணிக்க, ஓட்டுநா்கள், நடத்துநா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பிற உள்ளூா் வட்டாரங்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பதிவுகளும் சரிபாா்க்கப்பட்டன. துப்புகளைச் சேகரிக்க தகவல் அளிப்பவா்களும் ஈடுபடுத்தப்பட்டனா்.
காவல் நிலையங்களில், கப்பஷேரா காவல் நிலையம் எட்டு சிறு குழந்தைகளையும் 21 பெரியவா்களையும் கண்டுபிடித்து அதிகபட்ச மீட்புப் பணிகளில் ஒன்றாகப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தில்லி கண்டோன்மென்ட் காவல்துறை ஒரு சிறுவன் உள்பட 30 பேரைக் கண்டுபிடித்துள்ளது.
நிகழ் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, மாவட்டத்தில் காணாமல் போன 143 குழந்தைகள் மற்றும் 399 பெரியவா்கள் உள்பட மொத்தம் 542 போ் கண்டறியப்பட்டு, அவா்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


