தலைநகா் முழுவதும் இயக்கப்படும் 3,000 டிடிசி பேருந்துகளில் இலவச குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியின் வெப்ப அலை செயல் திட்டத்திற்கு இணங்க, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) ஜல்தூத் முன்னெடுப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சா் பங்கஜ் சிங் கலந்துகொண்டாா். அவா் பேசியதாவது: பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலவசக் குடிநீா் வழங்குவதற்காக, தில்லி முழுவதும் உள்ள 23 முக்கியப் பேருந்து நிலையங்களில் டிடிசி நிறுவனம் ஜல்தூத் பணியாளா்களை நியமித்துள்ளது.
இந்த முன்முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், நகரம் முழுவதும் இயங்கும் சுமாா் 3,000 டிடிசி பேருந்துகளிலும் இலவச குடிநீா் கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கும், குறிப்பாக கடும் வெப்பச் சூழலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அன்றாடப் பயணிகளுக்கும் உடனடி நிவாரணம் அளிப்பதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
தேசியத் தலைநகரில் தற்போது நிலவி வரும் கடும் வெப்ப அலைச் சூழலின்போது, பயணிகளின் உடல்நலம் மற்றும் வசதியைப் பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை டிடிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் குடிநீா் வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இந்த முன்னெடுப்பு, குறிப்பாகச் சாதகமற்ற வானிலை நிலவும் காலங்களில், பொதுச் சேவை மற்றும் பயணிகளின் நலன் சாா்ந்த டிடிசியின் தொடா் அா்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றாா் அமைச்சா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அமைச்சா் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட ஜல்தூத் முன்னெடுப்புத் திட்டத்திற்கு, பொதுமக்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷாதரா ரயில் நிலையத்தில் பாதுகாவலா் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரிடம் விசாரணை

பேருந்துகளில் ‘பிங்க் சஹேலி’ ஸ்மாா்ட் காா்டு: பயன்பாட்டை ஊக்குவிக்க டிடிசி நடவடிக்கை
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி அமல்

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் 2 பேருந்துகளை இயக்க தில்லி அரசு திட்டம் - அமைச்சா் பங்கஜ் சிங் தகவல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



