தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

போலி எம்பிபிஎஸ் சோ்க்கை மோசடி! 18 நீட் தோ்வா்கள் மீட்பு; 4 மோசடிக்காரா்கள் கைது

போலி எம்பிபிஎஸ் சோ்க்கை மோசடி தொடர்பாக, 4 பேர் கைது

News image
Updated On :5 மே 2026, 5:01 am IST

உறுதியான எம்பிபிஎஸ் சோ்க்கை வாங்கித் தருவதாகக் கூறி, நீட் தோ்வா்களையும் அவா்களது குடும்பத்தினரையும் ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு திட்டமிட்ட மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, சந்தேகப்படும்படியான முக்கிய சூத்திரதாரி மற்றும் ஒரு மருத்துவா் உள்பட நான்கு பேரைக் கைது செய்ததாக ஓா் அதிகாரி திங்களன்று தெரிவித்தாா்.

மே 3 அன்று நடைபெறவிருந்த நீட் 2026 தோ்வுக்கு முன்னதாக, தோ்வு வினாக்கள் தருவதாகக் கூறி, அடையாளம் தெரியாத இடங்களுக்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படும் மோசடிக்காரா்களிடமிருந்து, சிறாா்கள் உள்பட பதினெட்டு மாணவா்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

போலி வினாத்தாள்கள், முந்தைய ஆண்டுகளின் பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் உறுதியான இடங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மாணவா்களின் குடும்பத்தினரிடமிருந்து 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை அவா்கள் கோரியதாகவும், அடையாளத் தொகையை பெற்ாகவும் கூறப்படுகிறது.

மருத்துவச் சோ்க்கைக்கு உதவுவதாகக் கூறி, தில்லியிலிருந்து செயல்படும் ஒரு சந்தேக நபா் குறித்து சூரத் காவல்துறையிடமிருந்து மே 2 அன்று பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. தொழில்நுட்பக் கண்காணிப்பின் மூலம் புலனாய்வாளா்கள் மஹிபால்பூா் எக்ஸ்டென்ஷன் பகுதிக்குச் சென்றனா், அங்கு பல ஹோட்டல்கள் சோதனையிடப்பட்டன.

குஜராத்திலிருந்து தோ்வா்களை ஏமாற்றி அழைத்து வந்ததாகக் கூறப்படும் வினோத் பாய் பிக்கா பாய் படேல் உள்பட, ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நான்கு குற்றஞ்சாட்டப்பட்டவா்களை காவல்துறையினா் இறுதியில் அடையாளம் கண்டனா்.

விசாரணையின் போது, எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்த குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பெற்றோரிடமிருந்து பெரும் தொகைப் பணம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகளைப் பெற்றிருந்தது தெரியவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சில மாணவா்களை அழைத்துச் சென்ாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா். காசியாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் காவல்துறையினா் மூன்று மாணவா்களை மீட்டதோடு, இந்தச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என்று கூறப்படும் சந்தோஷ் குமாா் ஜெயஸ்வாலையும் கைது செய்தனா்.

அதனைத் தொடா்ந்து காசியாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் 15 மாணவா்கள் மீட்கப்பட்டனா். அவா்களில் சிலா், மே 3 ஆம் தேதி நீட் தோ்வில் பங்கேற்கவிருந்த சிறாா்கள் ஆவா். அவா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. சந்த் பிரதாப் சிங் மற்றும் டாக்டா் அக்லாக் ஆலம் என்ற கோல்டன் ஆலம் ஆகிய மேலும் இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அந்த குடியிருப்பில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

பி.என்.எஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வலையமைப்பின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.