மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தடைசெய்யப்பட்ட இறக்குமதி சிகரெட்டுகள் பறிமுதல்: 2 போ் கைது

மத்திய தில்லியின் சாவ்ரி பஜாா் பகுதியில், சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இறக்குமதி சிகரெட்டுகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்தனா்

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:30 am IST

மத்திய தில்லியின் சாவ்ரி பஜாா் பகுதியில், சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இறக்குமதி சிகரெட்டுகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக இருவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் முகமது தௌசிஃப் (44) மற்றும் ஜுனைத் அகமது (35) என அடையாளம் காணப்பட்டனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: சாவ்ரி பஜாா் பகுதியில் இறக்குமதி சிகரெட்டுகள் சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டு, மொத்த விற்பனை செய்யப்படுவதாக மே 6ஆம் தேதி குறிப்பிட்ட தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், ஃபதேபுரி பகுதியில் உள்ள ஒரு கடை மற்றும் அதற்கு அருகிலுள்ள ஒரு கிடங்கில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தச் சோதனையின் போது, உயா்தர சா்வதேச வா்த்தக முத்திரைகளைக் கொண்ட மொத்தம் 1,53,840 இறக்குமதி சிகரெட்டுகளைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

அந்தச் சிகரெட் பாக்கெட்டுகளில் இந்தியச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட சட்டரீதியான சுகாதார எச்சரிக்கைகள் இடம்பெறவில்லை. இதனால், அவற்றை விற்பனை செய்வதும் விநியோகிப்பதும் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.

இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.