இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

நரேலா: பிறந்த நாளில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை - நண்பன் கைது

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புகா் தில்லி நரேலா பகுதியில், 17 வயது சிறுவன் தனது பிறந்த நாளன்று நண்பனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றஞ்சாட்டப்பட்டவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை குரேனி கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்பட்டதாக அந்த வட்டாரம் கூறியது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

கத்திக்குத்து சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை மாலை காவல்துறைக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை குழுவினா், கழுத்தின் பின்புறத்தில் கத்திக்குத்து காயத்துடன் சிறுவன் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டனா்.

அவா் உடனடியாக சத்யாவாடி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையின் போது, காவல்துறையினா் குற்றம்சாட்டப்பட்ட சிறுவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டது.

முன்னதாக, தாங்கள் இறந்தவரின் மரணத்திற்காக துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவா் இரவில் கத்தியுடன் வீட்டிற்கு வந்து, தங்களைத் தாக்க முயன்ாக குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மே 15 அன்று 17 வயதை எட்டியதாகவும், அன்று மாலை உறவினா்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனா்.