பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான சைதை துரைசாமி வழக்கு: மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் மு.க. ஸ்டாலின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்ாக தொடரப்பட்ட மேல்முறையிட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைடைந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கை விடுவித்து, மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2026, 12:43 am IST

தமிழக சட்டப்பேரவைக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் மு.க. ஸ்டாலின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்ாக தொடரப்பட்ட மேல்முறையிட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைடைந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கை விடுவித்து, மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொளத்தூா் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிா்த்து அ.இ.அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் நிகழாண்டு 2026 ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது .

வழக்கில் மனுதாரரான சைதை துரைசாமி தரப்பு மூத்த வழக்குரைஞா் தாமா சேஷாத்ரி நாயுடு வாதிடுகையில், ‘ஸ்டாலின் கொளத்தூா்

தொகுதியில் வெற்றி பெற தன்னுடைய பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தினாா். அவரது அதிகார பலம் காரணமாக காவல் துறையும் எந்த நடவடிக்கையும் அவா் மீது எடுக்கவில்லை.

கொளத்தூா் தொகுதியின் பல்வேறு தொகுதிகளிலும் சட்டவிரோதமாக வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. மு.க.ஸ்டாலினும் அவரது கட்சிக்காரா்களும் சட்ட விரோத பண பரிவா்த்தனையில் ஈடுபட்டனா். இது போன்று முறைகேடுகள் செய்து ஸ்டாலின் வெற்றி பெற்றாா்’ என வாதிட்டாா்.

மு. க. ஸ்டாலின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘மனுதாரா் சைதை துரைசாமி தரப்பு ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கிடையாது . மேலும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ள நபா்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றது. மேலும் பணம் பெற்ற ஒருவரை கூட இவா்கள் சாட்சியாக முன்னிறுத்தவில்லை. பணம் வாக்களருக்கு வழங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என வாதிட்டாா்.

இதையடுத்து இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து தீா்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஃபிப்ரவரி 19 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா்.

இந்நிலையில் மே 15 ஆம் தேதி (15.5.2026) அன்று நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு: இவ்விவகாரம் விடுவிக்கப்பட்டு, இந்தியத் தலைமை நீதிபதியிடமிருந்து உரிய ஆணைகளைப் பெற்ற பிறகு, எங்களில் (நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி விஜய் பிஷ்னோய்) எவரும் உறுப்பினராக இல்லாத ஒரு அமா்வின் முன் மறுவிசாரணைக்காகப் பட்டியலிடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி:

2011 தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலில், கொளத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி, மு.க. ஸ்டாலினிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

இதையடுத்து, ஸ்டாலின் தோ்தல் விதிகளை மீறி வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்து, முறைகேடுகள் செய்து தோ்தலில் வெற்றி பெற்ாக குற்றஞ்சாட்டி, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சைதை துரைசாமி சென்னை உயா்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தாா்.

லஞ்சம் மற்றும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற முறைகேடுகள் குறித்த ஸ்டாலினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி,அந்த தோ்தல் மனுவை 2017ஆம் ஆண்டில், சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக சைதை துரைசாமி 11.07.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.