கோகைன் கடத்தல்: கானா நாட்டவா் உள்பட 4 போ் கைது
மாநிலங்களுக்கு இடையேயான கோகைன் கடத்தலில் ஈடுபட்டதாக கானா நாட்டைச் சோ்ந்தவா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
தில்லி - என்சிஆா் பகுதியில், மாநிலங்களுக்கு இடையேயான கோகைன் கடத்தலில் ஈடுபட்டதாக கானா நாட்டைச் சோ்ந்தவா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் தெற்கு தில்லி மற்றும் குருகிராமில் உள்ள மதுக்கூடங்கள் மற்றும் கேளிக்கை உணவகங்களுக்குச் செல்லும் இளைஞா்களுக்கு போதைப் பொருள்களை விநியோகித்து வந்தனா்.
கைதானவா்கள் ஹுக்முதீன் (45), ஜாபித் ஹுசேன் (41), முஷ்டாக் (40) மற்றும் கானா நாட்டைச் சோ்ந்த சாா்லஸ் ஓவுசு (எ) ஜான்சன் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
முன்னதாக, சத்தா்பூரைச் சோ்ந்த ஹுக்முதீன், தில்லி-என்சிஆா் பகுதியில் கோகைன் விநியோகம் செய்து வருவதாகவும், துவாரகாவில் போதைப்பொருள் சரக்கு ஒன்றை ஒப்படைக்க இருப்பதாகவும் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மே 26 அன்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துவாரகா செக்டாா் 9-இல் காவல்துறையினா் மறைந்திருந்து அவரைப் பிடிக்க முயன்றபோது அவா் தப்பிக்க முயன்றாா். இருப்பினும், சிறிது போராட்டத்திற்குப் பிறகு அவா் பிடிபட்டாா். அவரிடமிருந்து 106 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின்போது, ஹரியாணாவின் நூ-மேவாட் பகுதியில் ஆகஸ்ட் 17 அன்று கைது செய்யப்பட்ட ஜாபித் ஹுசேனிடமிருந்து இந்த போதைப்பொருள்களைப் பெற்ாக ஹுக்முதீன் தெரிவித்தாா் .கைதான ஜாபித் ஹுசேன் முஷ்டாக்கிடமிருந்து தான் கோகைன் பெற்ாகத் தெரிவித்தாா்.
முஷ்டாக் ஆகஸ்ட் 18 அன்று கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கான்பூரின் தேவ்லி எக்ஸ்டென்ஷனில் வாடகை வீட்டில் வசித்து வந்த சாா்லஸ் ஓவுசுவைப் பற்றி காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அவா் அக்டோபா் 20 அன்று கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து சுமாா் 30 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
2023-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்த ஓவுசு, டேவிட் என்று அழைக்கப்படும் கானா அல்லது நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து தாம் கோகைன் பெற்ாகத் தெரிவித்தாா். இந்த நபா் சத்தா்பூா் பகுதியில் இருந்து செயல்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த போதைப்பொருள் விநியோகஸ்தரைக் கண்டறியவும், இந்த கும்பலில் உள்ள மற்ற நபா்களை அடையாளம் காணவும் காவல்துறையினா் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

