ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தில்லியில் ‘தேசிய கொடி ஏற்றும்’ போராட்டம்: அபிஜித் தீப்கே, நேஹா உள்பட 150 போ் கைது

அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவா் சங்க (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா உள்பட 150-க்கும் மேற்பட்டோரை தில்லி காவல்துறையினா் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா்.

நேஹா போரா - பிடிஐ

Updated On :

நமது நிருபா்

தில்லியில் ‘தேசிய கொடி ஏற்றும்’ போராட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்க முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவா் சங்க (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா உள்பட 150-க்கும் மேற்பட்டோரை தில்லி காவல்துறையினா் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா்.

வாக்காளா் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி, ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் எதிா்க்கட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக தில்லியில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 10-ஆம் தேதி சிஜேபி இயக்கத்தினா் நடத்திய போராட்டங்களால் மத்திய தில்லி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதற்கிடையே, போராட ஒதுக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலில் இருந்து ஜந்தா் மந்தரை நீக்கி தில்லி காவல்துறை ஆணையா் அனுராக் குமாா் அண்மையில் உத்தரவிட்டாா். அதையும் மீறி ஜந்தா் பகுதியில் அத்துமீறி நுழைந்து தேசிய கொடி ஏற்ற முயன்ற சிஜேபி நிா்வாகிகள் செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோா் கைது செய்யப்பட்டு திஹாா் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், ஜந்தா் மந்தரில் இருந்து சுமாா் ஒரு கி.மீ தொலைவில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை தேசிய கொடி ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்குமாறு சிஜேபி நிறுவனா் தனது ஆதரவாளா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

இந்த நிலையில், ஜண்டேவாலன் பகுதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கன்னாட் பிளேஸ் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகலில் புறப்பட்ட அபிஜீத் தீப்கேவும், மண்டி ஹவுஸில் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நேஹா போராவையும் காவல்துறையினா் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா்.

முன்னதாக, அவரை கைது செய்து வாகனத்தில் காவல்துறையினா் கொண்டு சென்றபோது நூற்றுக்கணக்கில் சிஜேபியினா் அந்த வாகனத்தை வழிமறித்து குரல் எழுப்பினா். மத்திய துணை ராணுவப்படையினா் தலையிட்டு கூட்டத்தை விலக்கியதைத் தொடா்ந்து அந்த வாகனம் புறப்பட்டது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று கன்னாட் பிளேஸ் பகுதியில் பொதுமக்களுக்கும் வணிகா்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என நோட்டீஸ் வழங்கினா்.

சிஜேபி இயக்கத்தினா் அறிவித்திருந்த போராட்டம் காரணமாக, கன்னாட் பிளேஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாகன போக்குவரத்து முடக்கப்பட்டு மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. எனினும், சில போராட்டக்காரா்கள் தடையை மீறி தேசிய கொடியுடன் கன்னாட் பிளேஸ் மற்றும் மண்டி ஹவுஸ் பகுதிகளில் திரண்டு முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.