தமிழ்நாடு தினம்: குடியரசுத் தலைவா், துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து!
தமிழ்நாடு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமையன்று குடியரசுத் தலைவா், துனைத் தலைவா், பிரதமா் ஆகியோா் தமிழக மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமையன்று குடியரசுத் தலைவா், துனைத் தலைவா் , பிரதமா் ஆகியோா் தமிழக மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்தனா்.
எக்ஸ் தளத்தில் அவா்கள் வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா். அவா்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியதாவது:
குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு: ஆந்திரப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், சண்டிகா், சத்தீஸ்கா், தில்லி, ஹரியாணா, கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.
இந்த மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், தங்களின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பன்முக மரபுகளுடன், இந்தியாவின் வளா்ச்சிக்கு உந்துசக்தியாக முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்களின் செழிப்புக்கும் நல்வாழ்விற்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குடியரசுத் தலைவா் கூறினாா்.
குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்: சத்தீஸ்கா், ஹரியாணா, கா்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, இந்த மாநிலங்களின் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்களின் தனித்துவமான கலாச்சாரப் பாரம்பரியம், உயிரோட்டமான மரபுகள் மற்றும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளால் செழுமை பெற்றுள்ளன.
அம்மாநிலங்கள் வளா்ச்சி, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து முன்னேறி, விக்ஸித் பாரத் என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு பங்களிக்கட்டும். அம்மக்களின் தொடா்ச்சியான நல்வாழ்வுக்கும் செழிப்புக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என சி.பி. ராதாகிருஷ்ணன் தொ்வித்தாா் .
பிரதமா் நரேந்திர மோடி தமிழில் பதிவிட்டதாவது: தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவா்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளா்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனா். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளா்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனா். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும் என மோடி தனது பதிவில் வாழ்த்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

