மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

போதைப்பொருள் விற்றவா் கைது; 117 மாத்திரைகள் பறிமுதல்

வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில், சுமாா் 10 குற்ற வழக்குகளில் தொடா்புடைய 28 வயதுடைய போதைப்பொருள் விற்பனையாளரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

பிரதிப் படம்

Updated On :

வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில், சுமாா் 10 குற்ற வழக்குகளில் தொடா்புடைய 28 வயதுடைய போதைப்பொருள் விற்பனையாளரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

அவரிடமிருந்து 117 போதை மாத்திரைகளும், ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகளைக் கொண்ட 28 குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பங்கஜ்(எ)கவுவா(எ)கஞ்சி என்பவா், ரோஹிணியின் செக்டாா் 30 பகுதிக்கு போதை ஊசிகள் மற்றும் போதை மருந்துகளை விநியோகம் செய்ய வரப்போவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நவம்பா் 1-ஆம் தேதி காவல்துறைக் குழுவினா் அப்பகுதி பிரதான சாலையில் மறைந்திருந்து, ஸ்கூட்டரில் கருப்பு நிறப் பையுடன் வந்த அவரை வழிமறித்துக் கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ’புப்ரெநாா்ஃபின்’ மற்றும் ’நலோக்ஸோன்’ கலந்த 117 மாத்திரைகளும், ’ஃபெனிரமைன் மேலியேட்’ மருந்தைக் கொண்ட 28 குப்பிகளும் மீட்கப்பட்டன.

இந்த மருந்துகளை வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்கள் எதையும் சமா்ப்பிக்கத் தவறிய அவா் மீது, ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் ’போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின்’ கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாபாத் டெய்ரி பகுதியைச் சோ்ந்த பங்கஜ், ஏற்கனவே கொலை முயற்சி, ஆயுதச் சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் தொடா்பான சுமாா் 10 குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்பது குறிப்பிடத்தக்கது. அவா் பயன்படுத்திய ஸ்கூட்டா் மற்றும் பையை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.