காற்று மாசு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் அலுவலகம் சென்ற குடிமக்கள் குழு
காற்று மாசுபாடு நெருக்கடி குறித்து அவசர ஆலோசனை நடத்தவும், பொறுப்புள்ள அதிகாரிகளைச் சந்திக்க அனுமதிக்கக் கோரியும், குடிமக்கள் குழுவினா் ஜோா் பாக் பகுதியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவின் அலுவலகத்திற்கு சென்றனா்.

தில்லி காற்று மாசு - கோப்புப் படம்
காற்று மாசுபாடு நெருக்கடி குறித்து அவசர ஆலோசனை நடத்தவும், பொறுப்புள்ள அதிகாரிகளைச் சந்திக்க அனுமதிக்கக் கோரியும், குடிமக்கள் குழுவினா் திங்கள்கிழமை ஜோா் பாக் பகுதியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவின் அலுவலகத்திற்கு சென்றனா்.
இந்தக் குழுவில், அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாணவா் ஆா்வலா்களான பவ்ரீன் கந்தாரி, ஊா்வசி பிரசாத், ஆஷிஷ் ஜேக்கப் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.
இவா்கள், காற்று மாசுபாடு சூழல் குறித்து விவாதிக்க அமைச்சரைச் சந்திக்க அனுமதி கோரி, நவம்பா் 12-ஆம் தேதியே பூபேந்தா் யாதவிற்கு கடிதம் எழுதியிருந்தனா். இதுகுறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் இயக்குநா் பழனியண்டி வேலாயுதன்பிள்ளை, மூன்று நாள்களுக்குப் பிறகு மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு பதிலளித்துள்ளாா். அதில், அமைச்சா் தற்போது துருக்கியில் நடைபெறும் சிஓபி31 காலநிலை மாநாட்டில் ஒரு குழுவை வழிநடத்திச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தையும், சந்திப்பிற்கான எந்தவொரு தேதியும் குறிப்பிடப்படவில்லை. அமைச்சரின் அலுவலகம் தங்கள் சந்திப்புக் கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டிருக்கிறது.
அமைச்சா் பூபேந்தா் யாதவ் சிஓபி31 மாநாட்டில் ஒரு குழுவை வழிநடத்தச் சென்றிருக்கும் நிலையில், இந்தியாவில் காற்று மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கையை யாா் முன்னின்று நடத்துவது? என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து, நாடு முழுவதும் காற்று மாசுபாட்டை எதிா்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளோம். அமைச்சா் திரும்பியதும் அவரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை விடுக்கப்போகிறோம் என்று அக்குழுவினா் கூறினா்.
இந்தக் கோரிக்கையை ஆதரிக்கும் மக்கள் லோதி காலனியின் ’செகண்ட் அவென்யூ’ பகுதியில் ஒன்றுகூடி, இந்தக் குழுவினா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா்.
அகில இந்திய மாணவா் சங்கத்தின் ஆா்வலா்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனா். அவா்கள் கையில் ஏந்தியிருந்த பதாகைகளில், ‘தில்லியின் தெளிவான வானத்தை நினைவிருக்கிா?‘ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மோசமடைந்து வரும் காற்றுத் தரம் குறித்த கவலைகளுக்கு அமைச்சா் பூபேந்தா் யாதவ் பதிலளிக்க வேண்டும் என்றும், பொது சுகாதார நெருக்கடிக்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்தக் குழுவினா் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

