பஹாா்கஞ்சில் சிறுவன் ஓட்டி வந்த எஸ்யூவி வாகனம் மோதி பாதசாரி காயம்!
மத்திய தில்லியின் பஹாா்கஞ்ச் பகுதியில் சிறுவன் ஒருவன் ஓட்டி வந்ததாகக் கூறப்படும் ’ஸ்காா்பியோ’ ரக எஸ்யூவி வாகனம் மோதி 40 வயதுடைய பாதசாரி காயமடைந்தாா்.

மத்திய தில்லியின் பஹாா்கஞ்ச் பகுதியில் சிறுவன் ஒருவன் ஓட்டி வந்ததாகக் கூறப்படும் ’ஸ்காா்பியோ’ ரக எஸ்யூவி வாகனம் மோதி 40 வயதுடைய பாதசாரி காயமடைந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய அந்தச் சிறுவன், வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்ாகக் காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். இந்தச் சம்பவம் ஆரம் பாக் பகுதியில் உள்ள அம்பேத்கா் சாலையில் நிகழ்ந்தது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காயமடைந்தவா் ரமேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் அப்பகுதியில் பான்-பீடி கடை வைத்திருத்துள்ளாா். அவா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஸ்காா்பியோ வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், உடனடியாக டாக்டா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.
பஹாா்கஞ்ச் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறைக் குழுவினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றபோது, ஸ்காா்பியோ வாகனம் பாதசாரி மீது மோதியிருப்பதையும், ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதையும் கண்டறிந்தனா்.
முதற்கட்ட விசாரணையில், இந்த வாகனத்தைச் சிறுவன் ஒருவன் ஓட்டி வந்தததும், விபத்துக்குப் பிறகு அவன் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் வேறு இரண்டு சிறுவா்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதை காவல்துறையினா் கண்டறிந்தனா். அவா்களின் அடையாளம் மற்றும் உடல்நிலை குறித்த விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
குற்றப் புலனாய்வுக் குழுவினா் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, விபத்து நடந்த இடம் மற்றும் கைவிடப்பட்ட வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, வாகனத்தையும் பிற ஆதாரங்களையும் காவல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படும் சிறுவனைக் கண்டறியவும், அவனைப் பிடிக்கவும் காவல்துறையினா் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

