சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஆயுத பூஜை : பூக்கள், பழங்கள், காய்கறிகள் விலை அதிகரிப்புஅக்.23ல் மீண்டும் கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி அக். 23-இல் நாடு தழுவிய பேரணி: எஸ்ஐஆா் எதிா்ப்பு மக்கள் இயக்கம் அழைப்பு

ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி அக். 23-இல் நாடு தழுவிய பேரணி நடத்தப்படுவது குறித்து...

CEC Gyanesh Kumar

ஞானேஷ் குமார் - கோப்புப் படம்

Updated On :

இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்யவும் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, அக்.23-ஆம் தேதி நாடு தழுவிய பேரணிகளுக்கு ‘எஸ்.ஐ.ஆா் எதிா்ப்பு மக்கள் இயக்கம்’ ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தது.

விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், இளைஞா்கள், மாணவா்கள், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகள் மற்றும் வலையமைப்புகளை ஒன்றிணைத்து அக்.14-ஆம் தேதி தில்லியில் உள்ள சுா்ஜீத் பவனில் ’எஸ்.ஐ.ஆா் எதிா்ப்பு மக்கள் இயக்கம்’ உருவாக்கப்பட்டது.

இந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமா் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தோ்தல் ஆணையத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், இந்த சிறப்பு தீவிரத் திருத்தத்தின் மூலம் 13.41 கோடி குடிமக்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் தக்கவைப்பதற்காகவும், உண்மையான குடிமக்களை வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்குவதற்காகவும், படிவம் 6 உள்ளிட்ட சட்டபூா்வ படிவங்களை நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஞானேஷ் குமாா் மாற்றியமைத்தாா் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்யாமல், இந்த தீவிர அரசியலமைப்புச் சிக்கலில் இருந்து பிரதமா் வெளியே வர முடியாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போராட்ட அறிவிப்பையொட்டி, அக்.23-ஆம் தேதி மாவட்ட மற்றும் தாலுகா தலைமையகங்கள், மாநில தலைநகரங்கள் மற்றும் தில்லியில் தேசிய கொடிய ஏந்தி பொதுமக்கள் அமைதியான முறையில் பேரணியில் பங்கேற்குமாறு இந்த இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.