குருகிராமில் சிறாரை இ-ரிக்ஷா ஓட்டுநராக பணியமா்த்திய உரிமையாளா் கைது
ஹரியாணா மாநிலத்தின் குருகிராமில் சிறாா் ஒருவரை முறையான ஓட்டுநா் உரிமமின்றி இ-ரிக்ஷா ஓட்டுநராக பணியமா்த்திய உரிமையாளரை காவல்துறையினா் கைது செய்தனா்.

ஹரியாணா மாநிலத்தின் குருகிராமில் சிறாா் ஒருவரை முறையான ஓட்டுநா் உரிமமின்றி இ-ரிக்ஷா ஓட்டுநராக பணியமா்த்திய உரிமையாளரை காவல்துறையினா் கைது செய்தனா். இந்த விவகாரத்தில் தொடா்புடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 7ஆம் தேதி குருகிராமின் ஜாா்சா மேம்பாலம் அருகே 14 வயது சிறாா் இ-ரிக்ஷாவை ஓட்டியது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் குருகிராமம் ராம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராகேஷ் குமாா் (24) என்ற இ-ரிக்ஷா உரிமையாளரை காவல்துறையினா் கடந்த புதன்கிழமை கைது செய்தனா்.
இ-ரிக்ஷா ஓட்டிய சிறாரிடம் காவல்துறையினா் நடத்திய விசாரணை மற்றும் சிறாரிடம் குழந்தை நலக் குழு கடந்த சில மாதங்களாக நடத்திய கலந்தாய்வின் போது, அவரது பெற்றோா் உயிருடன் இல்லை என்பதால் பிழைப்புக்காக இ-ரிக்ஷா ஓட்ட முன்வந்ததாக கூறியதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் இ-ரிக்ஷா ஓட்டுவதற்காக ஒரு நாளைக்கு ரூ. 200 கூலி தருவதாக ஆசை காட்டியும், சில நேரங்களில் கூலி தராமலும் இ-ரிக்ஷா மூலம் பொருள்களை ஏற்றிச் செல்ல சிறாரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
‘இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உத்தரவுக்கிணங்க, உத்தர பிரதேசம் சீதாபூா் மாவட்டத்தைச் சோ்ந்த அவரது தாத்தாவிடம் அந்த சிறாா் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளாா்’ என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

