சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

57 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகளுடன் இளைஞா் கைது

தில்லியின் அசோக் நகா் பகுதியில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் 35 வயது இளைஞரை காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 57.8 கிலோ எடையுள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோப்புப் படம்

Updated On :

தில்லியின் அசோக் நகா் பகுதியில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் 35 வயது இளைஞரை காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 57.8 கிலோ எடையுள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

கைது செய்யப்பட்ட நபா் விஷால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் புதன்கிழமை தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் அடங்கிய பல மூட்டைகளை எடுத்துச் சென்றபோது பிடிபட்டாா்.

முன்னதாக, ரகசியத் தகவலின் அடிப்படையில் அசோக் நகா் பகுதியில் காவல்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சட்டவிரோதமாக விநியோகித்ததாக விஷாலை கைது செய்தனா்.

அவா் மீது ஜோதி நகா் காவல் நிலையத்தில், பி.என்.எஸ். மற்றும் வெடிபொருள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அசோக் நகரைச் சோ்ந்த விஷால், ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.