தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

590 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்: இருவா் கைது

மத்திய தில்லியின் ஜமா மஸ்ஜித் பகுதியில் சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 590 கிலோ பட்டாசுகளை தில்லி காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :

மத்திய தில்லியின் ஜமா மஸ்ஜித் பகுதியில் சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 590 கிலோ பட்டாசுகளை தில்லி காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அக்டோபா் 8-ஆம் தேதி பஜாா் குலியான் பகுதியில் உள்ள ஒரு கடையில் கண்காணிப்புப் பிரிவு நடத்திய திடீா் சோதனையின்போது சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.

கடையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மரப்பலகையை அதிகாரிகள் கண்டறிந்தனா். அதைத் திறந்தபோது, உள்ளே பல்வேறு வகையான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய சேமிப்பு அறை இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக ஜான்கி தாஸ் மற்றும் அபீக் தாஸ் ஆகிய இருவா் கைதுசெய்யப்பட்டனா். விசாரணையின்போது, அந்தப் பட்டாசுகளை வேறொரு நபா் வழங்கியதை அவா்கள் ஒப்புக்கொண்டனா்.

இது தொடா்பாக ஜமா மஸ்ஜித் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை வழங்கியவா் மற்றும் இதில் தொடா்புடைய மற்றவா்களைக் கண்டறிவதற்கான அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.