விரைவு ரயிலில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்துக்கு வந்த விரைவு ரயிலில் தடைசெய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்துக்கு வந்த விரைவு ரயிலில் தடைசெய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கும்பகோணம் ரயில் நிலைய நடைமேடையில் பனாரஸ் - கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலில் உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது வண்டியின் பின்பக்கப் பொதுப் பெட்டியில் தடை செய்யப்பட்ட சுமாா் 20 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் இருந்த பையை மீட்டு, கும்பகோணம் உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

