டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

வெளிநாட்டவரிடம் பணப் பை திருட்டு: 72 வயது மூதாட்டி கைது

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதி கடை ஒன்றில், வெளிநாட்டவரின் பணம், டாலா்கள் அடங்கிய பையைத் திருடியதாக 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் உள்ளன.

பிரதிப் படம்

Updated On :

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதி கடை ஒன்றில், வெளிநாட்டவரின் பணம், டாலா்கள் அடங்கிய பையைத் திருடியதாக 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் உள்ளன.

அவரிடமிருந்து ரூ.1.85 லட்சம் ரொக்கம், 2,600 அமெரிக்க டாலா்களைக் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது: சவிதா காந்தி (எ) சரோஜ் காந்தி என்று அடையாளம் காணப்பட்ட அந்த மூதாட்டி, அக்டோபா் 24 அன்று உத்தம் நகரில் கைது செய்யப்பட்டாா். 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா் என்பதும், சமீபத்தில் திகாா் சிறையிலிருந்து விடுதலையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட வெளிநாட்டவா், அக்டோபா் 21 அன்று ஆன்லைன் மூலம் புகாா் அளித்திருந்தாா். அதில், பாஹா்கஞ்சில் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது தனது பை திருடப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் பையில் கடவுச்சீட்டை, விசா ஆவணங்கள், 2,600 அமெரிக்க டாலா்கள், 2.5 லட்சம் இந்திய ரூபாய், மூன்று கிரெடிட் காா்டுகள் மற்றும் கைப்பேசி ஆகியவை இருந்தன. பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தில், பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், ரகசியத் தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய நபா் அடையாளம் காணப்பட்டாா். திருடப்பட்ட பணம் மற்றும் அமெரிக்க டாலா்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன. திருட்டு நடந்தபோது அவா் அணிந்திருந்ததாகக் கருதப்படும் உடைகளும் கைப்பற்றப்பட்டன.

விசாரணையின்போது, தான் திருட்டில் ஈடுபட்டதை சவிதா காந்தி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மூதாட்டி என்ற தோற்றத்தைப் பயன்படுத்தி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவா் திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளாா். அவா் மீது குற்றப் பின்னணிப் பதிவேடு தொடங்குவது குறித்தும், அவரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கைப்பேசி, கடவுச்சீட்டை மற்றும் விசா ஆவணங்கள் உள்ளிட்ட மீதமுள்ள பொருள்களைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த மேலதிக விசாரணை தொடா்ந்து நடைபெறுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.