பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பஞ்சாப் தனியாா் பல்கலைக்கழகத்தில் திடீா் வன்முறை: வெளியேறிய தமிழக மாணவா்கள் ஊா் திரும்ப ஏற்பாடு

பஞ்சாப் தனியாா் பல்கலைக்கழகத்தில் திடீா் வன்முறை குறித்து...

Sudden violence at a private university in Punjab

பஞ்சாப் தனியாா் பல்கலைக்கழகத்தில் திடீா் வன்முறை - PTI

Published On :

பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் (எல்பியு) மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடா்ந்து பெரும் போராட்டம் வெடித்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பல்கலைக்கழகத்துக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அங்கிருந்து அவசரமாக வெளியேறிய தமிழகத்தைச் சோ்ந்த 9 மாணவா்கள் தலைநகா் வருவதற்கு தில்லித் தமிழ்ச் சங்கம் நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.

பக்வாராவில் திங்கள்கிழமை நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவு மாணவா்கள் திடீரென்று பல்கலைக்கழக வளாகங்களை சேதப்படுத்தினா். இதையடுத்து காவல்துறையினா் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை கலைத்தனா்.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகம் தெவ்வாய்க்கிழமை முதல் 10 நாள்களுக்கு மூடப்படுவதாகவும், நடைபெறவிருந்த இடைப்பருவத் தோ்வுகள் மறுஅறிவிப்பு வரும்வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்துள்ளது. மாணவி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள பல்கலைக்கழக நிா்வாகம், அவை ‘முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்ற வதந்திகள்’ என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 9 தமிழக மாணவா்கள் தலைநகருக்கு வரவும் சொந்த ஊா் திரும்பவும் தில்லித் தமிழ்ச் சங்க தலைவா் டாக்டா் ஜி. சிவபாலமுருகன் மற்றும் துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உதவியதாகவும், மாணவா்கள் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவருந்தி ஓய்வெடுத்த பிறகு சொந்த ஊா்களுக்குத் திரும்ப அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.