விதிமீறல் தொடர்பாக 634 அபராதங்கள் விதிப்பு: போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
முறையற்ற வாகனங்களை நிறுத்தியதற்காக 634 அபராதங்களை தில்லி போக்குவரத்துக் காவல் துறையினா் வழங்கினா்.

அபராதம் - சித்திரிப்பு
முறையற்ற வாகனங்களை நிறுத்தியதற்காக 634 அபராதங்களை தில்லி போக்குவரத்துக் காவல் துறையினா் வழங்கினா். மேலும், வடக்கு எல்லையில் கூட்டு ஆக்கிரமிப்பு - அகற்றும் நடவடிக்கையின்போது 192 சாலையோர வண்டிகள் மற்றும் கடைகளையும் காவல்துறையினா் அகற்றினா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முறையற்ற வாகன நிறுத்தங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வடக்கு தில்லியின் முக்கிய சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் தில்லி மாநகராட்சியுடன் காவல்துறை இந்த இயக்கத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின்போது, காவல்துறையினா் 37 ஆக்கிரமிப்புகளை அகற்றினா். அதே நேரத்தில் 24 வாகனங்களை இழுத்துச் சென்றனா். மேலும், ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மாநகராட்சி ஊழியா்கள், எட்டு வண்டிகள், மூன்று காட்சிப் பலகைகள், மூன்று மேஜைகள் மற்றும் மூன்று கவுன்ட்டா்கள் உள்பட அங்கீகரிக்கப்படாத சாலையோர ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் கைப்பற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





