குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 63ஆவது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 3 லட்சம் மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இப்பணியை தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் குருமணி தொடங்கிவைத்தாா். முதல்கட்டமாக சால்வியா, டேலியா நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பழக் கண்காட்சிக்காக மூன்று லட்சத்து பத்தாயிரம் மலா் நாற்றுகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட உள்ளது. இதில், சால்வியா, சைக்ளமேன், ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, ஜெராேனியம் போன்ற 29 வகையான மலா் நாற்றுகள், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு 152 வகையான நாற்றுகளும் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அனிதா, சிம்ஸ் பூங்கா மேலாளா் லட்சுமணன் உள்பட தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


