தமிழகத்தின் மிகப் பெரிய புத்தகத் திருவிழா என்றால், அது சென்னைப் புத்தகக் காட்சிதான். வாசகர்களுக்கும் சரி, பதிப்பாளர்களுக்கும் சரி. நிச்சயமாக இது ஒரு கொண்டாட்டமான தருணம். இந்த முறை 10 லட்சம் பேர் புத்தகக் காட்சிக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணிக்கை எதிர்பார்ப்பைக் கடக்கலாம். கூட்டம் அவ்வளவு வருகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை எந்த அளவுக்கு வளர்ச்சியுடன் நாம் ஒப்பிட முடியும்?
புத்தகக் காட்சிக்கு வரக்கூடிய ஒரு வாசகர் சராசரியாக ரூ. 500-க்குப் புத்தகம் வாங்கினால்கூட இந்தக் காட்சியில் ரூ. 50 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாக வேண்டும். உண்மை என்னவென்றால், இந்தத் தொகையில் 10 சதத்தைக்கூட சென்னைப் புத்தகக் காட்சி சந்தை மதிப்பாகக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். தேசிய வாசகர் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்று தமிழகம். ஆனால்,
புத்தக விற்பனை மோசமாக இருக்கும் மாநிலங்களிலும் நாமே முன்னணி வகிக்கிறோம்.
இந்த முரண்நகை எங்கிருந்து உருவாகிறது?
இந்தப் புத்தகக் காட்சிக்கு தமிழ்ப் புத்தகங்கள் விற்கும் அரங்குகளுக்கு வந்த வாசகர்கள் பலருடனும் அவர்களுடைய புத்தக வாசிப்பு தொடர்பாகவும் தமிழ்ப் பதிப்புத் துறை தொடர்பாகவும் பேசியபோது ஒரு விஷயத்தை எல்லோரும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள்: ""புத்தகம் படிக்க நேரம் கிடைக்கவில்லை; புத்தகங்களின் விலை அதிகமாகிவிட்டது.''
ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் அரங்குகளுக்கு வரும் வாசகர்களிடம் கேட்டபோது அவர்களும் தமிழ் வாசிப்பு குறித்தும் தமிழ்ப் பதிப்புத் துறை குறித்தும் இதே கருத்தைக் கூறினார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால், இந்த இரு கருத்துகளுமே அடிப்படையற்றவை என்பதுதான். நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு சாக்கு; நேரத்தை நாம் வெவ்வேறு வழிகளில் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. அதேபோல, அரிசியில் தொடங்கி தங்கம் வரை எந்த ஒரு பொருளுடன் ஒப்பிட்டாலும் புத்தகங்களின் விலை உயர்வு குறைவாகவே நடந்திருக்கிறது; ஆங்கிலப் புத்தகங்களுடன் ஒப்பிட்டால் எல்லா காலகட்டங்களிலும் தமிழ்ப் புத்தகங்கள் மலிவாக கிடைக்கின்றன என்பதே உண்மை.
ஆனால், நாம் ஏன் இந்தக் காரணங்களைக் கூறுகிறோம்?
உண்மை என்னவென்றால், இது ஒரு மனோபாவம். பழக்கமின்மை.
அதிகபட்சம் மூன்று மணி நேரமே ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தைக் காண ஐந்நூறு ரூபாய் செலவழிக்கத் தயங்காத நாம், வாழ்க்கை முழுவதும் பயனளிக்கக் கூடிய புத்தகங்களுக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் செலவழிக்கத் தயங்குகிறோம் எனில், அதற்குக் காரணம் இதுதான்.
எங்கிருந்து இந்த மனோபாவம் உருவாகிறது? வீட்டிலிருந்தே உருவாகிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால், நம்முடைய வீடுகளில் - வீடுகள் எவ்வளவு பிரம்மாண்டமானவையாக இருந்தாலும் சரி - புத்தகங்களுக்கு என்று நாம் ஒதுக்கும் இடம் அதிகபட்சம் அலமாரிகளுக்கு மேல் இல்லையே? நம்முடைய குழந்தைகளுக்கு, அவர்கள் புத்தகம் வாங்க என்று ஒரு தொகையை ஒதுக்கும் பழக்கம் எந்தக் காலகட்டத்திலும் நம் கலாசாரத்தில் இல்லையே? நாம் வீட்டில் புத்தகங்களுக்கு கொடுக்கும் அதே இடத்தைத்தான் நம்முடைய ஊடகங்கள் கொடுக்கின்றன; நம்முடைய அரசாங்கம் கொடுக்கிறது; நம்முடைய சமூகம் கொடுக்கிறது.
இந்தப் புத்தகக் காட்சியில், "ஏன் புத்தகங்கள் படிக்க வேண்டும்; புத்தகங்கள் படிப்பதால் என்ன பலன்?' என்று இந்தக் கட்டுரைக்காக ஒரு கருத்துகணிப்பை நடத்தியபோது, ஆகப் பெரும்பான்மையினர் சொன்ன பதில் என்ன தெரியுமா? தொழில் சார்ந்த முன்னேற்றம்.
அதாவது, புத்தகங்களை நாம் பயன்பாட்டுக்கான கருவிகளாக - தொழில் கருவிகளாகப் பார்க்கவே பழகி இருக்கிறோம். அதாவது, புத்தகம் படித்தால் காசு கிடைக்க வேண்டும். அப்புறம் எப்படி புத்தகம் படிக்க காசு கொடுக்க நமக்கு மனம் வரும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

