ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ்
ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - சோம வள்ளியப்பன்; பக். 224; ரூ.140; சிக்ஸ்த்சென்ஸ், சென்னை-17; )044- 2434 2771.


ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - சோம வள்ளியப்பன்; பக். 224; ரூ.140; சிக்ஸ்த்சென்ஸ், சென்னை-17; )044- 2434 2771.
பங்குச் சந்தையில் ஏழை, பணக்காரர் எல்லாருமே ஈடுபடும் நிலை வந்துவிட்டது. இந்நூல் பங்குச் சந்தையில் நுழைவோருக்கு ஒரு கையேடு.
பங்குச் சந்தை என்றால் என்ன? ஆட்டமா? சூதாட்டமா? பங்குகள் வாங்க, விற்க என்ன கணக்குகளை எங்கே? எவரிடம் ஆரம்பிக்க வேண்டும்? வட்டிக்கும், டிவிடெண்டுக்கும் என்ன வித்தியாசம்? முன் பேர வர்த்தகம் (எஃப் அண்ட் ஓ), ஆன்லைன் வர்த்தகம், ஷேர்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை உண்டா? பங்கு வர்த்தகத்தில் என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன? வீட்டிலிருந்தே பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யலாமா? பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் செபியின் பணி என்ன? வாரன் பப்ஃபெட்டின் ஷேர் மார்க்கெட் பொன்மொழிகள், டாப் பெர்சனாலிட்டிகள் உள்ளிட்டவை குறித்து பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் எழுதப்பட்டுள்ள நல்ல நூல் இது.
பங்குச் சந்தையில் தின வர்த்தகம், குறுகிய கால, நடுத்தர கால, நீண்ட கால முதலீடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை நன்றாகவே விளக்கியுள்ளார். சேமித்து வைத்துள்ள பணத்தை "நிலைமைக்கு ஏற்ப பிரித்துப் போடு' என்று மிக அழகாக மூன்று வார்த்தைகளில் முதலீட்டுக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும், சென்செக்ஸ், நிஃப்டி என்றால் என்ன? இந்தியா தவிர மற்ற நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் எவை? என்பன போன்ற அடிப்படைத் தகவல்களும் உள்ளன. பங்குச் சந்தையில் பணம் பண்ணும் வழிமுறைகள் மட்டுமின்றி, பரஸ்பர நிதி என்றால் என்ன? அவை செயல்படும் விதம், பங்குகளுக்கும், பரஸ்பர நிதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கமாடிட்டி சந்தைகளில் நடப்பது என்ன? அதில் வர்த்தகம் செய்வது எப்படி? உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களும் ஏராளமாக உள்ள சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...