மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஈழ இலக்கியம்

ஈழ இலக்கியம் - ஒரு விமர்சனப் பார்வை- ஜெயமோகன் ; பக்.176 ; ரூ.155; கிழக்கு பதிப்பகம், சென்னை-14 ; 044 - 4200 9603.

Updated On :

ஈழ இலக்கியம் - ஒரு விமர்சனப் பார்வை- ஜெயமோகன் ; பக்.176 ; ரூ.155; கிழக்கு பதிப்பகம், சென்னை-14 ; 044 - 4200 9603.
ஈழ இலக்கியத்தை அறிமுகம் செய்தவர் பத்மநாப அய்யர். அதன் பின்னர் ஈழ இலக்கியத்தை ஈழப்போர் வழியாகவே அறிய நேர்ந்தது. ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாகின. அவையே ஈழ இலக்கியம் பரவலாக அறிமுகமாக வழி வகுத்தது. 
ஈழத்தின் இலக்கியச் சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி படைப்புகளின் வழியாகவும், சிறுகதையை அ.முத்துலிங்கம் படைப்புகளின் வழியாகவும், கவிதைகளை வில்வரத்தினம், சேரன் படைப்புகளின் வழியாகவும் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். 
தத்துவத்தின் விளிம்பில் மெய்யியலில் சஞ்சரிப்பவர் தளையசிங்கம். ஒரு முற்போக்காளராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய பின் அத்தத்துவத்தின் போதாமைகளை உணர்ந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தவர். விவாத அம்சத்தை பெரிதும் வலியுறுத்துபவர்.
ஈழ இலக்கியத் திறனாய்வாளர்களில் கைலாசபதி, சிவத்தம்பி இருவருக்கும் உள்ள இடம் முக்கியமானது. இலக்கியக் கோட்பாட்டாளரான சிவத்தம்பியின் அடிப்படை நோக்கு மார்க்சிய இயங்கியலே. 
எஸ்.பொன்னுதுரையின் கதைகள் மிகையுணர்ச்சியும், அலங்கார நடையும் கொண்டவை. இவரின் பெரும்பான்மையான கதைகள் காமத்தைச் சுற்றி இயங்கும் மன ஓட்டங்களைச் சித்திரிப்பவை. முத்துலிங்கத்தின் படைப்புலகில் அவரது அங்கதம் முக்கியமானது. 
வில்வரத்தினம் கவிதைகளின் சிறப்பியல்பு அவை தங்கள் சந்தத்தை உண்மையான உணர்ச்சியிலிருந்து பெற்று அதை வாசகனில் நிலை நாட்டும் பொருட்டு கவிதையில் ஒலிக்க விடுவதே. "புரட்சி, காதல் கவிதைகளை தொடக்க காலம் முதலே சேரன் மாறி மாறி எழுதியிருக்கிறார். பாரதிக்குப் பிறகு, தமிழில் புரட்சிக் கவிதைகளை எழுதியவராக அவரை அடையாளப்படுத்த விரும்புகிறேன்' என்கிறார் நூலாசிரியர். இந்த நூல், நூலாசிரியரை ஒரு விமர்சகராகவும் வாசகர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.