சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல்

நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் -  நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; பக்.168; ரூ.150; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

News image
Updated On :27 மே 2019, 12:45 am IST

நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் -  நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; பக்.168; ரூ.150; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவர் நூலாசிரியர்.  அவர் பல்வேறு மேடைகளில் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய நூல் மதிப்புரைகள்,  கட்டுரைகள், இலங்கை நாளிதழான "வீரகேசரி' க்கு அளித்த நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
நூலாசிரியரின் சீரிய கருத்துகள் இந்நூலில் தெளிவாகக்  கூறப்பட்டுள்ளன. நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும், தற்கொலை முயற்சியைக் குற்றமற்றதாகக் கருதலாமா?   பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007 கூறுவது என்ன?  பெண்களுக்கான சட்ட உரிமைகள் எவை? என்று நீதி, சட்டம் தொடர்பான பல கட்டுரைகளும், உரைகளும் ஒருபுறம் என்றால்,  திருவாசக ஆய்வுக்களஞ்சியம் நூலை வெளியிட்டு வழங்கிய வாழ்த்துரை,  மூவர் தேவார தமிழிசை விழாவில் ஆற்றிய உரை, மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரை என தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் இன்னொருபுறம் நம்மை  வியக்க வைக்கின்றன.  அண்ணாதுரை, கருணாநிதி, நீதிக்கட்சி,  திராவிட இயக்கம் தொடர்பான நூலாசிரியரின் கருத்துகள் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும் உள்ளன.  நூலாசிரியரின் பல்துறை சார்ந்த ஈடுபாடும், தெளிவும் வியக்க வைக்கிறது. 
எந்தவொரு கருத்தை எடுத்துக் கொண்டாலும் அதை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து நடைமுறை சாத்தியமான தீர்வுகளை நூலாசிரியர் வழங்கியிருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.