ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தோல் மருத்துவம் (சித்தா)

தோல் மருத்துவம் (சித்தா) - யோ.ரா. மானக்சா; பக்.160; ரூ.100 ; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17;)044-24331510

News image
Updated On :28 டிசம்பர் 2020, 3:36 am

DIN

தோல் மருத்துவம் (சித்தா) - யோ.ரா. மானக்சா; பக்.160; ரூ.100 ; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17;)044-24331510
 மனித உடலில் ஒரு பகுதி தோல் என்கிற வகையில் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தோலிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. தோல் நோய்கள் தோன்றும்விதம், அவற்றின் அறிகுறிகள், தோல் நோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவமுறைகள் பற்றி நூல் விளக்குகிறது.
 "எந்த ஒரு நக மாறுதலும், ஒரு குறிப்பிட்ட சரும நோயையோ அல்லது உள் வியாதியையோ குறிப்பதன்று. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வியாதி நகத்தில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கலாம். அதுபோலவே ஒரு குறிப்பிட்ட நகமாற்றம் பல்வேறு வியாதிகளால் உண்டாகலாம்' என்று நகத்தில் ஏற்படும் நோய்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.
 உணவில் சத்துகள் குறைந்தாலும், மிகுதியானாலும் பல தோல் நோய்கள் உண்டாகின்றன. புரதச் சத்துக் குறைவினால் ஏற்படும் தோல்நோய்கள், வைட்டமின் சத்துகள் குறைவதால் ஏற்படும் தோல் நோய்கள், அதுபோன்று வைட்டமின் ஏ அதிகமானால் ஏற்படும் தோல்நோய்கள் என பல்வேறு தோல்நோய்களைப் பற்றிய விவரங்களும், அதற்கான மருத்துவமுறைகளும் கூறப்பட்டுள்ளன.
 தோல் நோய்களைப் பற்றி நூலாசிரியர் தெளிவாக விளக்கும் முறை, குறிப்பிடத்தக்கது.
 சோரியாஸிஸ் நோய் பற்றி குறிப்பிடும்போது, "சோரியாஸிஸ் நோயுடையவன் உயிருடன் இருக்க முயல்கிறான். ஆனல் அவனுடைய தோல் இருக்கத் தவறுகிறது' என்கிறார்.
 நூலாசிரியர் சித்த மருத்துவர் என்பதால், முகப்பரு, சோரியாஸிஸ், கரப்பான், தேமல், படர் தாமரை, வெண்படை, புண்கள், கால் ஆணி, பொடுகு, மயிர்ப்புழு வெட்டு, தலை முடி உதிர்தல் உள்பட பல நோய்களுக்கான சித்த மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். தோல் நோய்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.