தமிழ் நாடக இலக்கியம் - ப.பாலசுப்பிரமணியன்; பக். 180; ரூ.180; சங்கர் பதிப்பகம், சென்னை- 49; 044-26502086.
தமிழ் நாடக இலக்கியத்தின் தோற்றம் முதல் இன்று வரையிலான ஏற்றங்களை அற்புதமான முறையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். நவீன வரவுகளான டி.வி.க்கள், சினிமா என்று
வந்தபோதும், கூத்துக் கலைக்கு இருக்கும் வரவேற்பை விவரிக்கிறது இந்த நூல்.
நாடகத்தின் தொன்மை, தற்கால வளர்ச்சி, இலங்கையில் தமிழ் நாடகத்தின் தாக்கம் என 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் நாடக மூவர் மற்றும் அண்ணா, சிவாஜி கணேசன், என்.எஸ்.கே., சோ என்று பல ஆளுமைகள் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாடகங்கள் வாயிலாக மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியதும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் விடுத்த தடைகள், கட்டுப்பாடுகளும் புதிய பாணியில் உரைக்கப்பட்டுள்ளன.
சமூக களத்தை நாடக மேடையாக்கி சாதாரண மனிதர்களை பார்வையாளர் களாகவும், பங்கேற்பாளர்களாகவும் மாற்றிய திராவிட இயக்கங்கள் பற்றி விரிவாக பேசுகிறது ஒரு கட்டுரை.
சென்னையில் நாடக சபாக்கள் தோற்றம், பின்னர் தமிழகம் முழுவதும் நாடகங்கள் அரங்கேறிய விதமும், நாடகக் கலைஞர்களின் வாழ்வும், வளர்ச்சியும் தொடர்பான கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம் : மாா்ச் 9-இல் ‘ஸ்விட்ச்’ ஏலம் - ரிசா்வ் வங்கி

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

