ஜெமினி சர்க்கிள் - சோம. வள்ளியப்பன்; பக். 192; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044 - 4200 9603.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் வெளியான 28 சிறுகதைகளை நூலாசிரியர் ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளார். நிதி மேலாண்மையையும், சுய முன்னேற்றத்தையும் எளிய நடையில் விளக்கிக் கூறும் இப்படி ஓர் இலக்கியவாதி இருக்கிறார் என்பதை சமகாலத்துக்கு உணர்த்தும் படைப்பாக வெளியாகியிருக்கிறது. சிறுகதைக்கான வரையறைகள் உடைக்கப்பட்டு, புதுமை என்ற பெயரில் இடியாப்ப சிக்கலைப் போல கதை சொல்லும் நடைமுறை வழக்கத்துக்கு வந்துவிட்ட நிலையில், அத்தகைய சங்கடத்தை வாசகனுக்குத் தராமல் எளிய நடையில் இதில் கதைகள் விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
இயல்பு வாழ்க்கைக்கு பரிச்சயமில்லாத பாத்திரங்களை கதையின் மாந்தர்களாக்காமல், நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
முதலாவதாக இடம்பெற்றிருக்கும் கறார் என்ற சிறுகதையின் நாயகி காய் விற்கும் ஒரு பெண். கறாராக இருப்பது என்பது எத்தகைய மனநிலை என்பதை ஓர் எளிய மனுஷியின் செயல்களின் மூலம் வாசகனுக்கு எடுத்துரைத்திருப்பது தனித்துவம்.
அதேபோன்று இந்தக் காலத்து பசங்க இருக்காங்களே, நின்று கொல்லும் தெய்வம், இடைவெளி, வக்கீல் மகள் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் வாசகனை வசியப்படுத்துகின்றன.
எளிய நடையில் மொழியையும், கதைக் களத்தையும் கையாண்டிருப்பதால் பல சிறுகதைகள் வாசகர்களிடம் சிநேகம் கொள்கின்றன.
1990-களில் சிறுகதைகளை எழுதிய சோம வள்ளியப்பன், அதன் பின்னர் பல ஆண்டுகளாக அந்த முயற்சியை கைவிட்டிருந்தார். கரோனா பொதுமுடக்கத்தில் மீண்டும் தனது இலக்கியப் பணிக்கு அவர் நீர் வார்த்திருக்கிறார். அது விழலுக்கு இறைத்த நீர் இல்லை என்பதை நூல் உறுதிப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம் : மாா்ச் 9-இல் ‘ஸ்விட்ச்’ ஏலம் - ரிசா்வ் வங்கி

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

