முத்திரை பதித்த பொறியாளர்கள் - எஸ்.கணேசன், பக். 192; ரூ.150; சண்முகம் பதிப்பகம், மதுரை- 625002; 97863 89946.
தமிழகத்தில் பொதுப்பணித் துறை 1858-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுப் பணித் துறை பொறியாளர்களாக இருந்து சிறப்பாக, நேர்மையாகப் பணியாற்றி வரலாற்றில் இடம் பிடித்த பொறியாளர்கள் குறித்து இந்த நூலில் விவரிக்கிறார் நூலாசிரியர்.
வள்ளுவர் கோட்டம், மகாத்மா காந்தி மண்டபம், அண்ணா சதுக்கம், கண்ணகி சிலை, முக்கிய அணைகள் என பல்வேறு முக்கிய கட்டுமானங்களின் சிறப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
இன்றைய அரசுப் பொறியாளர்களும், பொறியியல் மாணவர்களும் பொறியாளர்கள் எஸ்.விஸ்வேஸ்வரய்யா, மா.வே.மாணிக்கநாயக்கர், சி.மணவாளன், மு.துரைராசன் போன்றவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொறியியல் பேராசிரியர்கள் சாதனை படைத்த பொறியாளர்களின் வரலாறை பொறியியல் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவது அவசியம். வாய்ப்பிருந்தால் இவர்களைப் பற்றி ஒரு பாடம் கூட ஏற்பாடு செய்யலாம் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசின் கட்டுமானங்கள் எந்தளவுக்குத் தரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நூலாசிரியர் மருத்துவர்களுக்கு இணையாக கட்டுமானப் பொறியாளர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டடப் பொறியாளர்கள் படித்து, பாதுகாக்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம் : மாா்ச் 9-இல் ‘ஸ்விட்ச்’ ஏலம் - ரிசா்வ் வங்கி

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

