கல்கியின் பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் சுருக்கம்) - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக். 144; ரூ.160; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.
மிகப் பெரிய ஆங்கில நாவல்கள் மற்றும் அகராதிகளின் சுருக்கப்பட்ட வடிவங்கள் பல வந்துள்ளன. இவ்வகையான சுருக்க வடிவங்களில் டால்ஸ்டாய் (தாய், அன்னா கரினா, போரும் காதலும், புத்துயிர்ப்பு), எமிலி ஜோலா (நாநா), அலெக்சாண்டர் டூமாஸ் (த்ரீ மஸ்கட்டீர்), மாக்ஸிம் கார்கி (தாய்), ஜேன் ஆஸ்டின் (ப்ரைடு அன்டு பிரிஜிடிஸ்), குஸ்தாப் பிளாபர் (மேடம் பவாரி) உள்ளிட்ட பலரின் நாவல்கள் சுருக்க வடிவில் வந்து பெரும் வரவேற்பைப் பெற்றதுண்டு.
தமிழில் உ.வே.சா.வின் "என் சரித்திரம்' கி.வா.ஜ. சுருக்கமாக எழுதி வெளிவந்து பெயர் பெற்றதுண்டு.
இந்த வகையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்களும் சுருக்கப்பட்டு ஒரே நூலாக 144 பக்கங்களில் எழுதி வெளியிட்டிருக்கிறார் நூலாசிரியர். முதல் 4 பகுதிகளிலும் ஒவ்வொரு ஐந்து அத்தியாயங்களாக விளக்கியிருக்கிறார்.
ஐந்தாவது பாகம் மட்டும் பத்துபத்து அத்தியாயங்களாக சுருக்கி எழுதியிருக்கிறார். படிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது. இருந்தாலும், காதல், நகைச்சுவை, குத்தல் பேச்சு, அச்சம், எதிரிகளை வார்த்தைகளால் மடக்குதல், வரலாற்றை விவரித்தல் ஆகியவை கல்கியின் சிறப்பம்சம். சுருக்க வடியில் அவற்றைக் காண இயலாது.
முழு நாவலையும் ரசித்து படிக்க வேண்டுமானால் ஐந்து பாகத்தையும் தேடி படிக்கத் தூண்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்பட வடிவில் பார்க்க இருக்கிற இன்றைய தலைமுறையினருக்கு இந்தச் சுருக்கப் பதிப்பு உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்திய ரசிகர்களுக்கு பயத்தைக் காண்பித்த ஜேக்கப் பெத்தெல்..! 22 வயதில் வரலாற்றுச் சாதனை!

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

