அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம் - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்; பக். 96; ரூ.80; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை- 12; 044-26624401
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு 'அமைதி' என்ற பொருளுக்கு ஏற்ப இந்த நூலில் அகிம்சை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகிம்சை என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அதற்கு எதிர்சொல்லான வன்முறை குறித்து அதிகமாக எழுதப்பட்டுள்ளது. தனிநபர் வன்முறை, ஆன்மிக வன்முறை, பொருளாதார வன்முறை, கலாசார வன்முறை என பல்வேறு வகையிலான வன்முறைகள் குறித்தும் அதனால் சமூகம், நாடு, சர்வதேசமும் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை போரைத் தவிர்த்துக் கொள்ளும்படி இஸ்லாம் அறிவுறுத்தி இருந்தாலும், போரை ஏன் இஸ்லாம் அனுமதிக்கிறது என்றும் போரில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் என்ன என்றும் இந்த நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கால வன்முறையின் புதிய வடிவமான பயங்கரவாதத்தின் பல்வேறு வடிவங்களை அலசும் இந்நூல், வன்முறை, பயங்கரவாதம், வெறுப்புணர்வு ஆகியவை ஒழிய அன்பே அருமருந்து என்று தீர்வையும் முன்வைக்கிறது.
'உள்ளமே எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடம். உள்ளம் தூய்மையானால் உலகமே அமைதியாக இருக்கும். குற்றங்கள் செய்தால் இவ்வுலகிலும், மறுமையிலும் தண்டனை கிட்டும் என்ற உணர்வு தீமைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் சக்தி' என தற்காலத்துக்கு தேவையான பல்வேறு அறிவுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

