இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம் - ஜெகாதா; பக். 216; ரூ.220; நேஷனல் பப்ளிசர்ஸ், சென்னை-5; 044- 2834 3385.
செயற்கை உரத்தால் ஏற்பட்டுள்ள அழிவுகள், பேராபத்துகள், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து 31 தலைப்புகளில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாயும் நதிகளைக் கூறுவதோடு, பிற மாநிலங்களில் வேளாண்மைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளது. இயற்கையை மீட்டெடுத்த சிக்கிம் என்ற கட்டுரையில், அங்கு வேளாண்மைத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது. மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்துவதோடு, வெளி மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களும் விளக்கப்பட்டுள்ளன.
இவைதவிர, இயற்கை வேளாண்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நம்மாழ்வார், 10 ஆயிரம் பாரம்பரிய விதைகளை மீட்டு பெருமை சேர்த்த நெல் ஜெயராமன், விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்ட தண்ணீர் மனிதன் போன்றோரின் போராட்டங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாச மூர்த்தி 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளது போன்ற அரிய தகவல்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
வேப்பங்கொட்டைக்கு காப்புரிமை பெற 10 ஆண்டுகள் நடைபெற்ற சட்டப் போராட்டம் என்பது போன்ற இழந்த உரிமைகளை மீட்க நடைபெற்ற போராட்டம் வியப்பை ஏற்படுத்துகிறது. தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நூலில் ஏராளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

