யார் நீ - சோம. வள்ளியப்பன்; பக். 248; ரூ.275; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; 044 - 4200 9603.
2007-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'யார் நீ' நூல் தற்போது விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பாக வந்துள்ளது. சமூகத்திலும், சுய முன்னேற்ற வகுப்புகளிலும் அதிகம் விவாதிக்கப்படாத விஷயமான பர்சனாலிட்டி பற்றி விரிவாக இந்த நூலில் பேசப்பட்டுள்ளது. ஆளுமை, குணாதிசயங்கள், உள் மன நிலை, எண்ணங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பாக பர்சனாலிட்டியை வகைப்படுத்தலாம் எனக் கூறும் நூலாசிரியர், அதன் நிலைகள், தன்மைகள், சாதக, பாதகங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
மன நலனுடன் ஒருங்கிணைந்த பர்சனாலிட்டியை ஒருவர் முயற்சி செய்தால் மாற்ற முடியும் என்றும் கூறுகிறார் நூலாசிரியர். மிகவும் சிக்கலான நுண் தகவல்கள் அடங்கிய ஒரு நூலை தன்னைவிட எளிதாக எவராலும் எடுத்துரைக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.
உள்ளூரில் தொடங்கி உலகளாவிய உதாரணங்கள் வரை கூறி வாசகர்களை வாசிப்பு சுழலுக்குள் சிக்க வைக்கிறார். நாம் யார் என்று தெரிந்தால்தான் நமக்குள் என்ன மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என்பது புலப்படும். அந்த வகையில், எம்பிடிஐ, டிஏ, 16 பிஎ'ஃ'ப், எனிய கிராம் போன்ற செயல்முறைகளின் மூலம் ஒருவரது பர்சனாலிட்டியைக் கண்டறிய முடியும். அந்த வழிமுறைகளின் வழியே வாசகர்கள் தங்களது குணாதிசயத்தையும், ஆளுமை நிலையையும் அறிந்து கொள்ள முடியும். சர்வதேச ஆய்வுகளையும், தரவுகளையும் இணைத்து உளவியல் கையேடாக வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

