தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும் - முனைவர் சு.நரேந்திரன்; பக். 304; ரூ.340; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; 044- 26251968.
தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வி ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே மலர்ந்தது என்பதை நூலாசிரியர் முன்வைக்கிறார். தமிழ் வழிக்கல்வியின் வளர்ச்சி, இங்கிலாந்தில் இருந்து மெக்காலே வருகைக்குப் பின்னர் கல்வியில் ஏற்பட்ட புரட்சியை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
மெக்காலேவின் வருகைக்குப் பின்னர் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது நூல்.
கல்வியில் கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட முன்னேற்றம், காங்கிரஸ் அரசின் கல்விக் கொள்கைகள், ஹிந்தி திணிப்பை எதிர்த்து திமுகவின் போராட்டம் போன்றவை சுருக்கமாக, அனைவருக்கும் புரியும் வகையில் கூறப்பட்டுள்ளது.
இரு நூற்றாண்டுகளில் தமிழ் வழிக் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களும், மறுமலர்ச்சிகளும் 24 கட்டுரைகளில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது சிறப்பு. தமிழில் தொழில் கல்வியின் அவசியம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ள நூலாசிரியர், இதை அரசு கொண்டுவருவதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார்.
உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளதும் பாராட்டத்தக்கது. நீட் தேர்வுக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதை விவரித்துள்ள நூலாசிரியர், எளிதில் தேர்ச்சி பெற வழிகாட்டுதலையும் அளித்துள்ளார்.
நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழை கொண்டுவருவதன் முயற்சியையும் எடுத்துரைத்துள்ளார்.
தமிழர்கள், மாணவர்கள் அவசியம் படித்து அறிய வேண்டிய தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

