லா.ச.ரா.: தேர்ந்தெடுத்த கதைகள் - தொகுப்பாசிரியர் ஹவி; பக்.158; ரூ.222; வானவில் புத்தகாலயம், சென்னை 17; ✆ 7200050073.
லா.ச.ரா. என்கிற லா.ச.ராமாமிருதத்தின் 7 சிறுகதைகளின் தொகுப்பு. மனதின் உள்ளில் நிகழும் எண்ண ஓட்டங்களை எழுத்தில் வடிக்கும் 'நனவோடை' உத்தியை தமிழில் முதலில் கையாண்டு பல இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளவர்.
தனது கதை உலக மாந்தர்களின் அந்தரங்கச் சிக்கல்கள், போராட்டங்கள், குழப்பமான எண்ண ஓட்டங்களை வெற்றிகரமாக எழுத்தில் வடித்தவர். 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் இருந்த நிலைமை, எதிர்கொண்ட மனப் போராட்டங்கள் கதைக்களமாக உள்ளன.
இதற்கு உதாரணமாக 'பாற்கடல்' என்ற சிறுகதை. தலைதீபாவளியைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மனைவி, வேலைநிமித்தம் வெளியூரில் சிக்கிய கணவனுக்கு எழுதும் கடிதம்தான் 'பாற்கடல்'. 'உங்களுடன் கடிதத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லை. கடிதத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்' என்று ஏங்குகிறாள் அந்த மனைவி.
உரைநடை கதையா அல்லது கவிதை வரிகளா என்று வாசகரை சில சமயம் திக்குமுக்காடச் செய்யும் நடைக்கு சொந்தக்காரர் லா.ச.ரா.
'உன்னை நான் அறியுமுன்னர் என் உள் ப்ரக்ஞையில் நீ பீடம் கொண்டுவிட்டாய்.' 'துயிலில் தாண்டவ கோலத்தில் மூழ்கிவிட்ட செஞ்சடாதரன்.' 'அடித்த பஞ்சாகி பிறகு அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடரியின் கூர்முனையுமாகி, உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள் கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.'
'நேற்று, இன்று, இனி என நாம் நியமித்த ஏற்பாட்டில் நாம் உழம்பிக் கொண்டிருப்பது என்றும் உள்ள இன்றுதான்'.
இலக்கிய வாசகர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய தொகுப்பு நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

ரூ.17 கோடியில் ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகுகள், கலங்கல்கள் சீரமைப்பு பணி

பழங்குடியினா் நலனில் அக்கறை இல்லாத மேற்கு வங்க அரசு: குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி

பழனியில் மாதம் ஒரு டன் திருநீறு தயாரிக்க இலக்கு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

